ADVERTISEMENT
சென்னை பனையூரில் முன்னதாக நடைபெற்ற ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் மற்றும் குளறுபடி ஏற்பட்டது. இதனையடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் இதற்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்தார் ரகுமான். இசை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் செய்த தவறுக்கு தான் பலிக்கடா (goat) ஆகியுள்ளதாக அவர் கூறி இருந்தார். இதேபோல கோட் என்னும் மற்றொரு பிரபல வார்த்தையும் உண்டு. அதுகுறித்து அறிந்துகொள்வோம்.
ஒரு துறையில் சாதனை புரிந்த பிரபலத்தைப் பாராட்ட பலர் பயன்படுத்தும் வார்த்தை ஒன்று உண்டு. அதுதான் G.O.A.T. தமிழில் இதனை 'கோட்' எனத்தான் கூற முடியும்..! கோட் என்கிற ஆங்கில வார்த்தைக்கு 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்கிற விரிவாக்கம் உண்டு. இந்த வார்த்தை எப்படித் தோன்றியது எனத் தெரிந்துகொள்வோமா?
கோட் என்னும் வார்த்தை, அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி மூலமாகவே முதன்முதலில் பிரபலமாகியது. முகமது அலி ஜோ ஃப்ராஸியர், கிளீவ்லாண்ட் வில்லியம்ஸ், ஜார்ஜ் ஃபோர்மேன், ஜிம்மி எல்லிஸ், ஆஸ்கர் பொனவெனா உள்ளிட்ட பல குத்துச்சண்டை ஜாம்பவான்களுடன் 80-களில் சண்டையிட்டு வெற்றி பெற்றார். ஹெவிவெய்ட் பட்டங்களும் எக்கச்சக்கமான பணமும் இவரைத் தேடி வந்தன.
பாக்ஸிங் துறையில் இன்றுவரை அதீத பணம், புகழ் ஈட்டிய ஜாம்பவான் என்றால் அது முகமது அலிதான். இவர் தன்னை அடிக்கடி 'கிரேட்டஸ்ட்' ஃபைட்டர் எனக் கூறிக் கொள்வார். தன்னை யாராலும் மிஞ்சமுடியாது என்பார். மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு தான் செங்கலை சேதப்படுத்தியதாகவும் முதலையை சண்டையிட்டு வென்றதாகவும், மின்னல், இடி ஆகியவற்றை இடித்துத் தள்ளியதாகவும் சகட்டுமேனிக்கு சுய தம்பட்டம் அடித்துக் கொள்வார் முகமது அலி. இவரது இந்த சுய தம்பட்டம் விளையாட்டுத் தனமாக உள்ளதால், இதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமும் உண்டு..!
முகமது அலி பாக்ஸிங் கோப்பை பெரும்போது நடுவர்கள் அவரை 'தி கிரேட்டஸ்ட் பாக்ஸர் ஆஃப் ஆல் டைம்' எனக் கூறி புகழாரம் சூட்டிவது வழக்கம். இந்த வார்த்தைகள் காலப்போக்கில் கோட் (GOAT) என சுருக்கமாக அழைக்கப்பட்டன. அப்போது துவங்கி ஒரு துறையில் உச்சம் தொடும் சாதனையாளர்கள் கோட் என அழைக்கப்பட்டனர். மைக்கேல் ஜாக்ஸன், லியோனல் மெஸ்ஸி, மரடோனா, பீலே, சச்சின் டெண்டுல்கர், மைக் டைசன், பாப் மார்லே, எல்விஸ் பிரிஸ்லி உள்ளிட்ட பல உலகப் பிரபலங்கள் ரசிகர்களால் கோட் என அழைக்கப்பட்டனர். சிலர் இதனை ஜிஓஏடி எனவும் கூறுவர்.

வாசகர் கருத்து (9)
சச்சின் டெண்டுல்கர் , மெஸ்ஸி கூட எல்லாம் கம்பர் செய்வது எல்லாம் ரொம்ப ஓவர்.
Raja sir is always the G.O.A.T. His music has lifeline. Nobody else can self proclaim this title.
அது goat அல்ல. scapegoat.
இங்கு இவர்களை நம்பி போன மக்கள் தான் Scape Goat 🐐😀
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ரகுமான் இந்த இசை நிகழ்ச்சிக்கு பேசிய பணத்தை வாங்கி தன்னுடைய வங்கிகணக்கில் சேர்த்திருப்பர். முறையாக நாம் பரிதாபப்படவேண்டியது பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கி, இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் வீடு திரும்பியவர்களுக்குத்தான்.