ADVERTISEMENT
உலகின் முதன்முறையாக மெட்ரோ ரயில் சேவை பிரிட்டன் தலைநகர் லண்டனில் 1863ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கோல்கட்டாவில் 1984ம் ஆண்டு முதன்முதலில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.
லண்டனை போன்று கோல்கட்டா மெட்ரோ ரயில் சேவையும் சுரங்க பாதையில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு 20 நடைமேடைகளும், 8 ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கோல்கட்டா, டில்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத், மும்பை என மொத்தம் 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் சேவையாக டில்லி மெட்ரோ விளங்குகிறது. உலகளவில் அதிக மெட்ரோ ரயில் நிலையங்கள் கொண்ட 15 நகரங்களை பார்ப்போம்.

1.சியோல் (தென்கொரியா) - 768
2. பீஜிங் (சீனா) - 478
3. நியூயார்க் (அமெரிக்கா) - 472
4.குவாங்சூ (சீனா) - 411
5. ஷாங்காய் (சீனா) - 408
6. செங்டு (சீனா) - 373
7. ஷென்சென் (சீனா) - 369
8. பாரிஸ் (பிரான்ஸ்) - 308
9. மாஸ்கோ (ரஷ்யா) - 300
10. வூஹான் (சீனா) - 291

11. டில்லி (இந்தியா) - 287
12. சோக்கிங் (சீனா) - 277
13. மாட்ரிட் (ஸ்பெயின்) - 276

14. லண்டன் (பிரிட்டன்) - 272
15. ஹாங்சோ (சீனா) - 270
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!