Load Image
Advertisement

டில்லி விருந்தில் ஸ்டாலின்; சனாதன சமாதானம் என காங்., விமர்சனம்

 Congress Criticizes Stalins Sanatana Peace at Delhi Dinner    டில்லி விருந்தில் ஸ்டாலின்;   சனாதன சமாதானம் என காங்., விமர்சனம்
ADVERTISEMENT

டில்லியில் நடந்த, ஜி 20 உச்சி மாநாட்டில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதை, 'சனாதன சமாதானம்' என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜி 20 உச்சி மாநாடு டில்லியில் இரண்டு நாள் நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள், பிரதமர் மோடி, முதல்வர்கள் மம்தா, ஸ்டாலின், ஹேமந்த் சோரான் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அமெரிக்க அதிபர் ஜோ பைடைனை சந்தித்து கைக்குலுக்கினார். அதேசமயம் காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

முதல்வர் ஸ்டாலின், விருந்தில் பங்கேற்றதை தமிழக காங்கிரசார் சமூக வலைதளங்களில், 'சனாதான சமாதானம்' என்ற தலைப்பில் பதிவிட்டு விமர்சித்துள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில், சனாதனம் விவகாரத்தால், தி.மு.க., மீது காங்கிரசின் டில்லி மேலிட தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

'இண்டியா' கூட்டணியில் தி.மு.க., விற்கு முக்கியத்துவம் அளித்தால், ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் கருதுகிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காத விருந்து நிகழ்ச்சியை ஸ்டாலின் புறக்கணிக்காததை, சமூக வலைதளங்களில் காங்கிரசார் விமர்சித்துள்ளதால், கூட்டணியில் உரசல் உருவாக்கியுள்ளது.

சமூக வலைதளங்களில், தமிழக காங்கிரசார் பதிவிட்டிருப்பதாவது:



சர்வதேச தலைவர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய விருந்து நிகழ்ச்சியில் கார்கேவிற்கு அழைப்பில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது; அவர் பங்கேற்றார். அவர், 'இண்டியா' கூட்டணியை சார்ந்தவர்.

ஆனால், இன்றைய முதல்வரும், அன்றைய எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலினை, தமிழக கவர்னர் அழைக்காமல், தமிழகத்தில் தி.மு.க., இருக்கக்கூடிய காங்கிரசை மட்டும் அழைத்திருந்தால், தமிழக காங்கிரஸ் அதில் கலந்து கொண்டிருக்குமா?

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.



தந்தையும் மகனும் முரண்பாடு

கடலுார் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி், 'இன்றைக்கு தமிழகத்தை வெல்லலாம் என, சிலர் நினைக்கின்றனர். அதற்கான முயற்சியில் சிலர் மேற்கொள்கின்றனர். அவர்களின் முயற்சிக்கு, இந்தியாவில் எந்த மாநிலங்களில் வேண்டுமானால் வெற்றி கிடைக்கலாம், தமிழகத்தில் மட்டும் ஒரு போதும் வெல்ல முடியாது. அதற்கான காரணம், தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள வலுவான கூட்டணியும், அந்த கூட்டணியை வலுப்படுத்தும் கேப்டன் ஸ்டாலினும் தான்' என்றார்.இது குறித்து சமூக வலைதளங்களில் தமிழக காங்கிரசார் பதிவிட்டிருப்பதாவது:சனாதனம் விவகாரம் தொடர்பாக, உதய நிதிக்கு,' இண்டியா' கூட்டணியில் உள்ள தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, 'இண்டியா' கூட்டணி என்ற பெயரை உச்சரிப்பதை உதயநிதி தவிர்க்க விரும்புகிறார். அதனால் தான் அவர் தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி என்பதை சுட்டிக்காட்டி பேசுகிறார்.முதல்வர் ஸ்டாலின், 'இண்டியா கூட்டணி வென்றால் தான், இந்தியாவை காப்பாற்ற முடியும்' என, பேசுகிறார். இப்படி ஒரே கட்சியில் தந்தையும், மகனும் முரண்பாடாக பேசுவது தான் 'சனாதன சமாதானமா'?இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளனர்.






-நமது நிருபர்-



வாசகர் கருத்து (32)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    அமெரிக்க ஜனாதிபதிஅருகில் சென்று இளித்து கொண்டு படம் பிடித்திருப்பது காற்றில் மிதந்த அனுபவமாக இருந்திருக்கலாம் அவருக்கு.அவருக்கு.

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    இந்த நமுத்துப்போன காங்கிரசுக்கு இதுதான் வேலை. அவர்கள் தலைவர் கார்கேவுக்கு அழைப்பு இல்லையாம். அதான் மம்தா ஸ்டாலினையம் விமர்சிக்கின்றனர். கார்கே சுதந்திர தின விழாவை புறக்கணித்தபோது எங்கே இருந்தார்கள்

  • GANESUN - Chennai,இந்தியா

    அமைக்குஞ்சி பொறிச்சி வைச்சிருந்திருப்பாங்க...

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    'சனாதன சமாதானம்' என்று காங்கிரஸ் கட்சியினரே, அந்த கூடாத I.N.D.I.A. கூட்டணியில் உள்ள ஒரு சில உறுப்பினர் கட்சிகளை கிண்டலாக, ஏளனமாக பேசுகிறது. அப்படி இருக்க, அந்த கூட்டணி விளங்குமா...? விளங்கவே விளங்காது.

  • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    பணம் பதவிக்காக யாருடைய காலையும் பிடிப்பானுங்க கட்டுமர குடும்பம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்