Load Image
Advertisement

100-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி; கொள்ளுப்பேரன்கள், பேத்திகளுடன் கொண்டாட்டம்

 An old lady who celebrated her 100th birthday; Celebrating with grandkids and grandkids    100-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி; கொள்ளுப்பேரன்கள்,  பேத்திகளுடன் கொண்டாட்டம்
ADVERTISEMENT
நத்தம் : நத்தம் கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் 100 வயதை கண்ட சின்னம்மாள் தனது பிறந்தநாளை கொள்ளுப்பேரன்கள், பேத்திகள் புடை சூழ கேக் வெட்டி கொண்டாடினார்.

நத்தம் அருகே வேம்பார்பட்டி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆண்டி மனைவி சின்னம்மாள் . இவர் நேற்று தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கணவர் ஆண்டி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

மகள்கள், மகன் மூலம் பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள்,கொள்ளுப் பேத்திகள் என 50க்கு மேற்பட்டோருடன் சின்னம்மாள் தனது 100 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

சின்னம்மாளின் மகன் அழகர் சாமி கூறுகையில்,'' எங்கள் தலைமுறையில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அம்மா மட்டுமே.

அவர் இன்னும் அவரது வேலையை தானாகவே செய்து கொள்கிறார். யாருடைய உதவியும் அவருக்கு தேவை இல்லை.

வீட்டு வேலை,தோட்ட வேலைகளையும் செய்வார். கம்பு, சோளம் உள்ளிட்ட உணவுகளையே அதிகம் சாப்பிட்டதாகவும் அதனால்தான் தனக்கு அதிக சக்தி உள்ளதாகவும் அடிக்கடி கூறுவார்.

காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார்.கண்ணாடி அணியாமலேயே அனைத்து வேலைகளையும் செய்வார்.

அவர் வயது வரை எங்களால் இது போல் ஆரோக்கியமாக இருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. எந்த நோய்க்கும் மருத்துவமனை சென்று வைத்தியம் பார்த்தது கிடையாது.

கசாயம் வைத்து தனது நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொள்வார். அதனையே எங்களையும் சாப்பிடுமாறு அறிவுறுத்துவார்.

கொரோனா காலக்கட்டத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பலருக்கு நோய் தொற்று அறிகுறி ஏற்பட்டது.

அப்போது கூட எங்கள் அம்மா அனைத்து வேலைகளையும் சர்வசாதாரணமாக செய்து திடகாத்திரத்துடன் இருந்தார்.தற்போது அவரது பிறந்தநாளை எங்கள் குடும்பத்தில் உள்ள 55 பேரும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம்,'' என்றார்.


வாசகர் கருத்து (2)

  • அப்புசாமி -

    15 லட்சம் போட்டிருந்தா ஒரு குடும்பத்துக்கே 7.5 கோடி கிடச்சிருக்கும்.

  • mei - கடற்கரை நகரம்,மயோட்

    🙏🏼

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement