Load Image
Advertisement

உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..!

5 countries that Indians prefer for higher education..!   உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..!
ADVERTISEMENT



2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டு காலத்தில், 13 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், உலகெங்கிலும் உள்ள 79 நாடுகளில் இந்தியர்கள் படிப்பதாக கூறப்பட்டுள்ளது.

”பல்வேறு படிப்புகளில் சுமார் 13 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கின்றனர். இருப்பினும், வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களின் செலவுகள் குறித்த எந்தத் தரவையும் கல்வி அமைச்சகம் பராமரிக்கவில்லை" என்று ராஜ்யசபாவில் கடந்த மாதம் கல்வி இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் கூறினார்.


இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக முன்னுரிமை தரும் முதல் 5 நாடுகள் அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் சவுதி அரேபியா ஆகும்.

1. அமெரிக்கா :



Latest Tamil News
இந்திய மாணவர்கள், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், விரிவான அளவிலான கல்வித்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி, இன்டர்ன்ஷிப் மற்றும் தொழில் வாய்ப்புகளின் நம்பிக்கைக்குரிய வாய்ப்புகள் ஆகியவற்றால் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான சிறந்த தேர்வாக அமெரிக்காவை முன்னுரிமைப்படுத்துகிறார்கள்.

2. கனடா:



Latest Tamil News
அமெரிக்காவிற்கு அடுத்ததாக, இந்தியர்கள் அதிகம் விரும்பும் வெளிநாடுகளில்
கனடா 2வது இடம்பிடித்துள்ளது. எக்ஸ்பிரஸ் நுழைவு முறை காரணமாக இந்திய
மாணவர்கள் குறிப்பாக கனடாவில் படிக்க ஈர்க்கப்படுகிறார்கள். இந்த அமைப்பு கனடிய கல்விக்கு கூடுதல் புள்ளிகளை வழங்குகிறது. இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக உள்ளது. மேலும், பல கனடா மாகாணங்கள், தங்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து தகுதி பெற்ற சர்வதேச பட்டதாரிகளுக்கு நிரந்தர குடியுரிமை வாய்ப்பையும் வழங்குகின்றன. கல்விச்செலவும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், குறைவாக உள்ளது.

3. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்:



Latest Tamil News
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான இடமாக யு.ஏ.இ விளங்குகிறது. பல வணிகங்களின் மையமாக திகழ்வதுடன், பாதுகாப்பானது மற்றும் பலதரப்பட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழிலாளர் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. இது மாணவர்கள் படிக்கும் போது வேலை செய்வதை எளிதாக்குகிறது. கூடுதலாக, யு.ஏ.இ.,வில் உயர்தர வாழ்க்கை மற்றும் பல்வேறு கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.

4. ஆஸ்திரேலியா:



உலகத் தரம் வாய்ந்த கல்வி முறை, உயர் தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்கள், பல்வேறு கலாசாரம், சாதகமான படிப்புக்கு பிந்தைய வேலை வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக இது சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான இடமாக விளங்குகிறது.
Latest Tamil News
ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதற்கு, ஸ்காலர்ஷிப் ,நிதியுதவி மற்றும் விசா தேவைகளை தளர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சர்வதேச மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் படிப்பதில் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்படுவதாகும்.

5. சவுதி அரேபியா:



சவுதி அரேபியாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்கள் முழு நிதியுதவி உதவித்தொகை, அத்துடன் தாராளமான ஆராய்ச்சி மானியங்கள், உயர் உலகளாவிய தரவரிசைகள், சாதகமான மாணவர்-ஆசிரியர் விகிதங்கள் மற்றும் நூலகங்களை வழங்குகின்றன.

Latest Tamil News இவையனைத்தும் சவுதி அரேபியாவை சர்வதேச மாணவர்களுக்கான கவர்ச்சிகரமான இடமாக மாற்றுகிறது. டீன்ஷிப் ஆஃப் அட்மிஷன் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் என்பது சர்வதேச மாணவர்கள், சவுதி அரேபியாவில் குடியேற உதவும் ஒரு பிரிவைக் கொண்டுள்ளது. இந்த பிரிவானது வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து போன்றவற்றிற்கும், ஆவணங்கள் மற்றும் பிற தேவைகளுக்கு உதவிகளை வழங்குகிறது.



வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    இந்தியர்கள் வெளிநாடு போயிடுங்க. படிச்சு, அங்கேயே செட்டிலாயி சனாதனத்தை பரப்புங்கள். பாரத்கள் இங்கேயே இருந்து சனாதனம் பயிலுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement