ADVERTISEMENT
'போலார் பியர்' என்னும் பனிக்கரடி உலகின் சக்திவாய்ந்த மாமிசபட்சினிகளுள் ஒன்று. வடதுருவத்தில் அதிகம் வசிக்கும் இவை சீல்கள், மீன்களை வேட்டையாடி உண்ணுபவை. அதிகபட்சமாக 9 அடி உயரம்வரை வளரும் இவை 800 கிலோ எடை வரை இருக்கும்.
இவற்றின் கோரைப் பற்கள், கை நகங்கள் துருவத்தில் வாழும் கடல்வாழ் உயிரினங்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழுபவை. போலார் பியர் குறித்த சுவாரஸ்யத் தகவல்களைப் பார்ப்போம்.
பனிக்கரடிகள் என்னதான் பார்க்க ராட்சத உருவத்துடன் இருந்தாலும் இவற்றின் வெள்ளை உடல் காண்போரைக் கவரும். வெள்ளைப் புலி எப்படி அழகான ஆபத்துடன் உள்ளதோ அதேபோல பனிக்கரடியும் அழகான ராட்சத விலங்குகள்.
பனிக்கரடிகளின் உடல் ரோமம் வெண் நிறத்தில் உள்ளதாக நாம் நீண்ட நாட்களாக நம்பி வருகிறோம். ஆனால் அது தவறு. பனிக்கரடிகளின் தோல் கிரே நிறத்தில் இருக்கும். இதன்மீது முளைக்கும் ரோமம் நிறமற்ற சில்வர் கம்பிகள் போல இருக்கும். இந்த ரோமம் வெயிலில் படும்போது வெண்ணிறத்தில் காட்சியளிக்கும்.
சீல்களைப் பிடித்துக் கொல்ல பனிக்கரடிகள் தந்திரமாக செயல்படும். துருவத்தை ஒட்டிய கடற்பரப்பில் ஐஸ்கட்டிகள் இடையே பனிக்கரடிகள் ஒளிந்துகொள்ளும். சீல்களால் ஐஸ் கட்டிகளுக்கும் பனிக்கரடிகளின் உடலுக்கும் ஆன வித்யாசத்தைக் கண்டறிய முடியாத அளவுக்கு பனிக்கரடியின் உடல் சூரிய ஒளி பட்டு வெண்மையாகக் காட்சி தரும். கடற்கரையை நெருங்கும் சீல்களை பனிக்கரடிகள் லாவகமாகப் பாய்ந்து தாக்கி உண்ணும். மாலை நேரங்களில் சூரிய வெளிச்சம் பொன்போல ஒளிருவதால் மாலையில் பனிக்கரடிகள் இளமஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும்.
சூரிய ஒளி குறையும்போது பனிக்கரடிகள் சில்வர் கிரே நிறத்துக்கு மாறும். மீண்டும் அதிகாலை சூரிய ஒளியில் பனிக்கரடிகளின் உடல் வெண்மையாகக் காட்சியளிக்கும். விலங்குகளைப் பிடித்து உண்ண இயற்கை பனிக்கரடிகளுக்கு இதுபோன்ற ரோமத்தை அளித்துள்ளது.
பனிக்கரடிகள் ஐஸ்லாந்து, வேல்ஸ், கனடா, கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் அதிகமாக இனப்பெருக்கம் செய்பவை.
துருவத்தில் வாழும் பனிக்கரடிகள் அதிகபட்சமாக 30 ஆண்டுகள்வரை உயிர் வாழும். வனவிலங்கு சரணாலத்தில் பாதுகாக்கப்பட்ட பனிக்கரடி ஒன்று 45 வயதுவரை உயிர்வாழ்ந்துள்ளது.
இணைசேரும் காலத்தில் பெண் துணையுடன் உறவுகொள்ள ஆண் பனிக்கரடிகளுக்குள் சண்டை நடக்கும். இதில் ஒரு ஆண் பனிக்கரடி கொல்லப்படவும் வாய்ப்புள்ளது.
பனிக்கரடிகள் சில சமயங்களில் உணவுப் பற்றாக்குறையால் சிறிய பனிக்கரடிகளை வேட்டையாடி உண்ணும். குட்டி பனிக்கரடிகள் ஓநாய் உள்ளிட்ட விலங்குகளால் வேட்டையாடப்படும்.
பனிக்கரடியின் தோலை வைத்து ஸ்வெட்டர், ஜெர்கின், ஷால், ஓவர் கோட் தைக்கவும், அதன் இறைச்சியை உண்ணவும் மனிதன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவற்றை வேட்டையாடி வருகிறான். 15-17 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் பனிக்கரடி வேட்டை அதிகரித்து அவற்றின் எண்ணிக்கை குறைந்தது.
விலங்கு நல ஆர்வலர்களின் சீறிய முயற்சி காரணமாக பனிக்கரடிகள் வேட்டையை கட்டுப்படுத்த 1973 ஆம் ஆண்டு சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. பழங்குடி மக்கள் தவிர கனரக ஆயுதங்கள் கொண்ட மனிதர்கள் வர்த்தக நோக்கத்துக்காக பனிக்கரடிகளை வேட்டையாடக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
நார்வே உள்ளிட்ட நாடுகளில் பனிக்கரடி வேட்டை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கனடா, கிரீன்லாந்து நாடுகளில் பனிக்கரடி வேட்டைக்கு கட்டுப்பாடுகள் அதிகம்.
சில சமயங்களில் துருவத்தை ஒட்டி வாழும் பழங்குடி இனத்தவர்களின் வீடு, உயிருக்கு பனிக்கரடிகளால் ஆபத்து ஏற்படலாம். அதுபோன்ற நேரங்களில் பனிக்கரடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.
கப்பலில் எடுத்துச் செல்லப்படும் கச்சா எண்ணெய் தவறுதலாக கடலில் கொட்டினால், அதில் பனிக்கரடி உடல் நனையும்போது அவை தங்கள் ரோமத்தை முற்றிலும் இழக்கின்றன. காலநிலை மாற்றம் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகுவதால் பனிக்கரடிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை குறைகிறது. மனிதன் இதுபோல பலவிதங்களில் இயற்கையையும் விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் அழித்து வருவது வருந்தத்தக்கது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!