Load Image
Advertisement

தன்னம்பிக்கை அதிகரிக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!

Follow this to increase your confidence..!   தன்னம்பிக்கை அதிகரிக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!
ADVERTISEMENT


1. பயம் வேண்டாம்:


தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள குறுக்கு வழி எதுவும் இல்லை. பயத்தை நீங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் தோல்வியடையலாம். சங்கடத்தை உணரலாம். யாரும் உங்களுக்காக கவலைப்பட போவதில்லை. என்னுடைய பயத்தை எதிர்கொண்டு வெல்வேன் என உள்மனதிற்குள் உரக்கமாக சொல்லி கொள்ளுங்கள்.


2. நேர்த்தியாக ஆடை அணியுங்கள்:

நீங்கள் பார்க்க அழகாக இருந்தீர்கள் எனில் தானாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்த்தியான ஆடையை அணியும் போது, சிறப்பாக உணர்வீர்கள். அதன் நேர்மறையான ஆற்றல் உங்கள் முகத்தில் பிரகாசிக்கும். உங்களுக்கு மிகவும் பொருத்தமான, ஸ்டைலாக தெரியக்கூடிய ஆடைகளை அணியுங்கள்.
Latest Tamil News
3. உடற்பயிற்சி செய்யுங்கள்:

உங்கள் மனநிலையை மாற்றி அமைப்பதில் உங்கள் உடலுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு முறை உடற்பயிற்சியை முடிக்கும் போது, உங்கள் உடலுக்கு மூளை அனுப்பும் சமிக்கை நேரடியாக தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

4. உடல்மொழியில் கவனம் :


நீங்கள் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருக்கிறீர் என்பதை அறிய உடல்மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. நெஞ்சை நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வையுடன் நடந்து பழகுங்கள்.


5. உங்கள் பலத்தை எண்ணுங்கள்:
Latest Tamil News
உங்கள் தன்னம்பிக்கை, நீங்கள் எந்தளவு உங்கள் திறமையில் கவனம் செலுத்தி சாதனை படைக்கிறீர் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை உங்கள் பலம் என்னவென்பதை உங்களுக்கு சொல்லி கொள்ளுங்கள். இது உங்களை பற்றிய சுய மதிப்பீட்டை அதிகரிக்கவும், தன்னம்பிக்கை அதிகரிக்கவும் உதவும்.

6. பிறர் கருத்துக்கு முக்கியத்துவம் வேண்டாம் :

தன்னம்பிக்கை அதிகரிக்க பெரும் தடையாக இருப்பது அனைவருடைய கருத்துக்கு ஒத்துபோவது தான். உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என எண்ணுவது உங்களது வேலை இல்லை. உங்களை பார்த்து சிரிப்பவர்கள். கேலி செய்வார்கள். பின்னர் அவர்களே உங்களை உதாரணமாக கூறுவார்கள்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement