Load Image
Advertisement

ஸ்டோரேஜில் கெத்து காட்டும் ஓப்போ: ஆனாலும் இவ்வளவு தாராளம் கூடாது..!

Oppo that shows a lot of storage: But you shouldnt be so generous..!   ஸ்டோரேஜில் கெத்து காட்டும் ஓப்போ: ஆனாலும் இவ்வளவு தாராளம் கூடாது..!
ADVERTISEMENT
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள ஓப்போ நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வரிசையில் 1டிபி ஸ்டோரேஜ் அளவு கொண்ட புதிய ஓப்போ ஏ38 ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. அதுவும் பட்ஜெட் விலையில் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?ஆம் நம்பி தான் ஆக வேண்டும்.

ஓப்போ ஏ38 ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரேஷ் ரேட் கொண்ட 6.56இன்ச் கொண்ட எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியா ஹீலியோ ஜி80 சிப்செட்டுன் வருகிறது. இதோடு மாலி ஜி52 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு மற்றும் கலர்ஓஎஸ் 13.1 கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 50எம்பி மெயின் கேமரா, 2எம்பி போர்ட்ராய்ட் கேமரா உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் ஏஐ போர்ட்ராய்ட் ரீடச்சிங் அம்சங்களும் உள்ளது. செல்பிக்காக 5எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IPX4 தர ப்ளாஸ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் டூயல் 4ஜி சிம், ப்ளூடூத் 5.3, வை-பை 802 , ஜிபிஎஸ் மற்றும் என்ஃஎப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள், டைப் -சி சார்ஜிங் போர்ட் வருகிறது. விலையை பொறுத்தவரையில், ரூ.11,699க்கு விற்பனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (2)

  • Bharathanban Vs - tirupur,இந்தியா

    சீனா போன்.... சும்மா கொடுத்தாலும் வேண்டவே வேண்டாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement