Load Image
Advertisement

ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

 Recovery of temple properties worth Rs 5000 crore: Chief Minister Stalins pride   ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADVERTISEMENT
சென்னை: 5ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் திமுக அரசு மீட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: "எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஹிந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.

5ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள், 1000வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது ஹிந்து சமய அறநிலையத்துறை.

இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோரை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (53)

  • vbs manian - hyderabad,இந்தியா

    மீட்ட நிலங்களை யார் நிர்வகிக்கிறார்கள். கோவில்கள் நிர்வாகத்தில் தலையிட்டு திரும்ப அரசியல் தலைகள் அனுபவிப்பர்.

  • Gnanam - Nagercoil,இந்தியா

    அபகரித்ததற்கு தண்டனை ஏதாவது உண்டுமா?

  • Vasu - Somerset,யூ.எஸ்.ஏ

    மீதி 25000 கோடியை நாங்கள் அடித்து விட்டோம்

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    போலிகள் இந்து என்ற பெயரில் தமிழர்கள் கோவிலை கூறிவைக்கிறதா மக்கள் கூறுகின்றனர் அறநிலை துறை போலிகள் திட்டத்தை முறியடிக்க வேண்டும்

  • balakrishnan - Mangaf,குவைத்

    திருச்செந்தூர் கோவிலில் உள்ள பசுக்கள் பாதியை காணோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement