ADVERTISEMENT
திருவாலங்காடு:திருவள்ளூர் - -அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ., தூரம் உள்ளது. இந்த நெடுஞ்சாலையை ஒட்டி பல கிராமங்களில் ஏரி, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன.
மேலும், மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்கவும், தண்ணீர் சாலையை கடந்து செல்ல ஏதுவாக குறுக்கே கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அடுத்த வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புண்டரீகபுரத்தில் தனியார் வேளாண் கல்லுாரி அருகே ஏரிக்கு நீர் செல்ல அமைக்கப்பட்டிருந்த சிறு தரைப்பாலம் சேதமடைந்தது.
அதை சீரமைக்கும் பணி நான்கு மாதங்களுக்கு முன் நடந்தது.
அப்போது வாகன ஓட்டிகள் சென்று வர தற்காலிகமாக மண் கொட்டி நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது சிறு தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு ஒரு மாதமாக வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
ஆனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலை அகற்றப்படவில்லை. இதனால் கால்வாய் வழியாக ஏரிக்கு நீர் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை அகற்றி சீரமைக்க வேண்டும் என நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் மண் கொட்டி அடைக்கப்பட்ட கால்வாயை சீரமைத்து பாதை ஏற்படுத்தினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!