ADVERTISEMENT
தர்மபுரி:ர்மபுரி, குமாரசாமி பேட்டையைச் சேர்ந்தவர் டிப்ளமோ பட்டதாரி கவியரசன், 23. இவர், தன் தொடர் முயற்சியால் பென்சில் ஊக்கில், 15 அடி நீளத்துக்கு செயின் அமைத்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:என் தந்தை செல்வம் தையல் தொழிலாளி. தாய் மஞ்சுளா இல்லத்தரசி. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சிறு வயதில் இருந்து சிற்பக் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதில் யாருடைய கற்பித்தலும் இன்றி விநாயகர் சிலை செய்தேன். வயது அதிகரிக்க, என்னுள் இருந்த சிற்பக் கலை மீதான ஆர்வமும் அதிகரித்தது.
நானே என் தொடர் முயற்சியாலும், பெற்றோரின் ஊக்கத்தாலும் சாக்பீஸில் சிற்பங்கள் செய்வதை கற்றுக் கொண்டேன். சோழர் கால சிற்பங்களை, சாக்பீஸில் செய்து வந்தேன். என் உருவாக்கத்துக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியை, சமூக வலைதளங்களில் தேடினேன். அதில் கிடைத்த தகவல் வாயிலாக, சாக்பீஸில் மிகச்சிறிய அளவில் புத்தர் சிலை செய்தேன்.
இதற்காக எனக்கு 2019ல், 'ஆசியான் விருது' கிடைத்தது, என்னை மேலும் ஊக்கப்படுத்தியது.
இதற்கு,தர்மபுரி மாவட்ட அப்போதைய கலெக்டர் மலர்விழி எனக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, சாக்பீஸில் சிறிய அளவில் முருகன் சிலை செய்ததற்கு, 2021ல், 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு' விருது கிடைத்தது. இதுவே, என்னை கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை துாண்டியது. இதையடுத்து, பென்சில் ஊக்கில், 15 அடி நீளத்துக்கு செயின் அமைக்க முடிவு செய்தேன்.
என் முயற்சிக்கு பெங்களூரைச் சேர்ந்த அருணாச்சலம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காளத்தி, இன்பா டிரஸ்ட், தர்மபுரி கலெக்டர் சாந்தி, தணிக்கை துறை உதவி இயக்குனர் லோகநாதன்,
உதவியாளர் ராஜா மற்றும் இன்பா டிரஸ்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்தனர். நாள் ஒன்றுக்கு, 18 மணி நேரம் என, 10 நாட்களில், 15 அடிக்கு பென்சில் ஊக்கில் செயின் அமைக்கும் பணியை ஜன., 18ல் துவங்கி, 28ல் முடித்தேன்.
இதேபோன்ற போட்டியில், உலகத்தில் பலர் பங்கேற்ற நிலையில், குறைந்த நேரத்தில், 15 அடி நீளத்துக்கு செயின் அமைத்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை, என் படைப்பை அங்கீகரித்து, கின்னஸ் ரிக்கார்டு நிறுவனம் எனக்கு சான்றிதழ் வழங்கியது.இதன் வாயிலாக, என் சாதனை கனவில் அடி எடுத்து வைத்துள்ளேன். கின்னஸ் சாதனை படைத்த எனக்கு, அரசு அங்கீகாரம் வழங்காமல் உள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் எனக்கு அரசு வேலை வழங்கினால், மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!