Load Image
Advertisement

450எக்ஸ் எல்ஆர் எனும் புதிய வேரியன்ட் மூலம் ஓலாவுக்கு சவால் விடும் ஏத்தர்

Ether to challenge Ola with a new variant called 450X LR    450எக்ஸ் எல்ஆர் எனும் புதிய வேரியன்ட் மூலம் ஓலாவுக்கு சவால் விடும் ஏத்தர்
ADVERTISEMENT
ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் 450எக்ஸ் எல்ஆர் (450X LR) எனும் புதிய வேரியன்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.


இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனச்சந்தையில் ஓலா மற்றும் ஏத்தர் என இரண்டு முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனையில் கடுமையான போட்டியில் உள்ளன. ஓலா நிறுவனத்திடம் தற்போது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ, எஸ்1 ஏர் என மூன்று மாடல்கள் விற்பனையில் உள்ளது. அதே சமயம் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்திடம் 450எஸ், 450எக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களை மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்நிலையில் ஓலா நிறுவனத்திற்கு சரிக்கு சமமாக போட்டியாக ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி தனது அடுத்தப்படைப்பான, 450எக்ஸ் எல்ஆர் எனும் புதிய வேரியன்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

Latest Tamil News

ஏத்தர் 450எக்ஸ் எல்ஆர் தேர்வில் 2.9 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்த உள்ளது. இது முந்தைய மாடலான 450எஸ் மாடலிலும், இதே 2.9 kWh பேட்டரி பேக் தான் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 115 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் இந்த புதிய 450எக்ஸ் எல்ஆர் தேர்வில் மணிக்கு 90கிமீ., வேகத்தில் பயணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இது பேஸ் வேரியன்ட் போல குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்பதால், தொழில்நுட்ப அம்சங்களிலும், டிசைனிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் எனத் தெரிகிறது.
Latest Tamil News
450ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1.37 லட்சம் (எக்ஸ்ஷோரூம் விலை) ஆகும். இந்த மாடலைவிடவும் குறைவான விலையில் 450எக்ஸ் எல்ஆர் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. கிட்டத்தட்ட 1.10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு குறைவான விலையில் இந்த 450எக்ஸ் எல்ஆர் மாடல் விற்பனைக்கு வரும் பட்ச்சத்தில் ஓலா நிறுவனத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement