Load Image
Advertisement

சட்டசபைக்கும் வேட்பாளர்கள் தேர்வு: சென்னையில் நாளை பழனிசாமி முடிவு

 Selection of Assembly Election candidates: Palanisamy will decide tomorrow in Chennai   சட்டசபைக்கும் வேட்பாளர்கள் தேர்வு: சென்னையில் நாளை பழனிசாமி முடிவு
ADVERTISEMENT
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை, வரும் லோக்சபா தேர்தலில் அமல்படுத்துவதற்கு சாத்தியம் இருப்பதாக, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வேட்பாளர்கள் தேர்வு, மாவட்ட செயலர்கள் மாற்றம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்க, அவர் தயாராகி வருகிறார்.

அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமையை ஏற்படுத்தியுள்ள பழனிசாமிக்கு, டில்லி பா.ஜ., மேலிடம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மதுரை மாநாடு என, எல்லாமே கை கொடுத்துஉள்ளது. இருப்பினும், முன்னாள் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகளால், கட்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் பழனிசாமி எதிர்பார்த்த வேகம், கட்சி செயல்பாட்டில் இல்லை.

அதற்கு காரணம், அங்குள்ள நிர்வாகிகள் பலர், பன்னீர்செல்வத்தின் சிபாரிசு பெற்று பொறுப்புக்கு வந்தவர்கள்; தினகரனுடனும் தொடர்பில் இருப்பவர்கள். அந்த குறைபாட்டை சரிசெய்யவும், அப்பகுதியில் கட்சியை வலுவாக கட்டமைக்கவும், தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தில், தன்னுடைய விசுவாசிகளாக பார்த்து, மாவட்ட செயலர் உள்ளிட்ட பொறுப்புகளில் அமர்த்த பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார்.

அதை செயல்படுத்துவது தொடர்பாக, சென்னையில் நாளை, மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தை பழனிசாமி கூட்டியுள்ளார். அதில், கட்சியின் கட்டமைப்புகளை மாற்றி அமைப்பது குறித்தும், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்தும் விவாதிக்க உள்ளார்.

இதற்கிடையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து, பழனிசாமிக்கு சில தகவல்கள் வந்துள்ளன. அதில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறை, வரும் லோக்சபா தேர்தலில் அமலுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டு உள்ளது. எனவே, லோக்சபா தேர்தலுக்கு மட்டுமின்றி, சட்டசபை தேர்தலுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில், மாவட்ட செயலர்கள் நியமனத்தை மேற்கொள்ள பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தென் மாவட்டங்களில் குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மா.செ.,க்கள் மாற்றம் இருக்கலாம். சிவகங்கையில், 2016 சட்டசபை தேர்தலின் போது நடந்த அடிதடியில், அ.தி.மு.க.,வினர் தாக்கப்பட்டனர். அது தொடர்பான வழக்கில், சமீபத்தில் தி.மு.க., அமைச்சர் விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தடை போட்டுள்ளதாக, மாவட்ட செயலர் மீது கட்சிக்கு புகார் வந்துள்ளது. அதேபோல, ராமநாதபுரம் மாவட்ட செயலர் மீதும், கட்சியினரிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

மேலும், மதுரை மாநாட்டில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டதாக, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கோபத்தில் உள்ளனர். அவர்கள் சமீபத்தில் தனி ஆலோசனை நடத்திய தகவல் பழனிசாமிக்கு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட இரண்டு, 'மாஜி'க்களையும் அழைத்து பேசி சரிக்கட்டி உள்ளார். அவர்களும் சில பதவிகளுக்கு தங்கள் ஆதரவாளர்களை பரிந்துரைத்துள்ளனர்.

அத்துடன் சேர்த்து, தேனி, திருச்சி மாநகர் உள்ளிட்ட, கட்சியில் காலியாக உள்ள ஆறு மாவட்டங்களுக்கும், புதிய மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


- நமது நிருபர் -

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    இப்போது மத்தளத்திற்க்கு எல்லா பக்கத்திலும் அடி. மறுபடியும் திருச்செந்தூர் வள்ளி குகைக்குத்தான் போகவேண்டும் போலிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்