Load Image
Advertisement

ஸ்டைல் மன்னன் ஜாவா 42 பாபர் பைக்கில் பிளாக் மிரர் எடிஷன்!

New Jawa 42 Bobber Black Mirror launched in India at Rs. 2.25 lakh ஸ்டைல் மன்னன் ஜாவா 42 பாபர் பைக்கில் பிளாக் மிரர் எடிஷன்!
ADVERTISEMENT
ஜாவா 42 பாபர் (Jawa 42 Bobber) மோட்டார்சைக்கிளில் 'பிளாக் மிரர்' (Black Mirror) எனும் புதிய வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய வரவேற்பு கொண்ட இருசக்கர வாகனத்தயாரிப்பு நிறுவனமான ஜாவா, முந்தைய காலங்களில் தனது தயாரிப்புகள் மூலம் மிகப்பெரிய வரலாற்று சாதனைகளை புரிந்துள்ளது. அதன்பின் நீண்ட இடைவேளிக்கு பிறகு இந்திய சந்தைக்குள் அதிரடியாக களமிறங்கியுள்ளது. அதன்படி தனது ஜாவா 42 பாபர் எனும் தனது ஸ்டைலிஷான பைக்கை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வரும் ஜாவா நிறுவனம் தற்போது அதே மாடலில் 'பிளாக் மிரர்' எனும் புதிய வேரியன்டை அறிமுகம் செய்துள்ளது.
Latest Tamil News

காஸ்மெட்டிக் மாற்றங்களை பொறுத்தவரை அதன் பெயருக்கு ஏற்றார் போல், பைக்கில் பெரும்பாலான பாகங்கள் கருப்பு நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பைக்கின் பெட்ரோல் டேங்க் பகுதி, முன்பக்க ஹெட்லைட் கௌலிலும், எக்ஸாஸ்ட் குழாயின் முனைப்பகுதி க்ரோம் ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், என்ஜின் சிஸ்டத்திலும் க்ரோம் லைன்கள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜாவா 42 பாபர் பைக்கில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி த்ரோட்டில் பாடிஸ் 33மிமீ-இல் இருந்து 38மிமீ ஆக உயர்த்தப்பட்டன. அதேபோல், ஐடியல் ஆர்பிஎம் 1500இல் இருந்து 1300 ஆக குறைக்கப்பட்டன.
Latest Tamil News

ஆனால் தற்போது, பெர்ஃபாமன்ஸ் அடிப்படையில் புதிய பிளாக் மிரர் வேரியன்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பாபர் பைக்கில் 334சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகப்பட்சமாக 29 பிஎச்பி பவர் மற்றும் 32.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை, சார்ஜிங் துளை, டிஜிட்டல் கன்சோல் மற்றும் எல்இடி விளக்குகள் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Latest Tamil News
இந்தியாவில் ஜாவா பாபர் 42 வேரியன்டை விட, புதிய ஜாவா 42 பாபர் பிளாக் மிரர் வேரியன்ட் ரூ. 10 முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை அதிகமாக காணப்படுகிறது. அதன்படி, ஜாவா பிளாக் மிரர் வேரியன்ட்டின் விலை ரூ.2.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement