Load Image
Advertisement

அமைச்சர்களின் வழக்குளை விசாரிப்பதால் வில்லனாக பார்க்கிறார்கள்: நீதிபதி கவலை

Ministers are seen as villains for investigating cases: Judge worried   அமைச்சர்களின் வழக்குளை விசாரிப்பதால் வில்லனாக பார்க்கிறார்கள்: நீதிபதி கவலை
ADVERTISEMENT
சென்னை: அமைச்சர்களின் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பதால் என்னை வில்லனாக பார்ப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போது அமைச்சர் பெரியசாமி, அதிமுக., முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

ஐ.பெரியசாமி




Latest Tamil News
2008ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து 2012ல் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி பெரியசாமி தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, வழக்கில் இருந்து பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டார். இந்த வழக்கை நேற்று (செப்.,7) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

வளர்மதி




Latest Tamil News
அதேபோல், 2001-2006 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மறுஆய்வு செய்யும் வகையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.


இந்த இரு வழக்குகளும் இன்று (செப்.,8) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், ''கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை,'' எனக் கூறியதுடன், பெரியசாமி, வளர்மதி, லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.



வாசகர் கருத்து (44)

  • karve cbe -

    தவறான அரசியல்வாதிகளுக்கு நீங்கள் வில்லனாக இருந்தால், பொது மக்கள் உங்களை ஹீரோவாக கொண்டாடுவோம் சார்.. தொடரட்டும் உங்கள் பணி...

  • Dharmavaan - Chennai,இந்தியா

    வருமானத்துக்கு அதிகமான சொத்து வழக்கில் ஏன் எல்லா அரசியல்வாதிகளையும் கொண்டு வரவில்லை

  • Nallashami - Coimbatore,இந்தியா

    நன்றி. வாழ்த்தி வணங்குகிறோம் .. சாமானிய மக்களும், நீதிதேவனும் என்றும் உங்கள் பக்கம்..

  • பாமரன் - Kvpalaya,இந்தியா

    கொஞ்சம் தாமதமானாலும் சத்தியம் என்றும் வெல்லும்..ஐயா தமிழகமே உங்கள் பக்கம்.. திருட்டு திராவிஷ ஜந்துகளைப் பற்றி கவலை வேண்டாம்.. உங்களைப் மக்கள் போற்றுகிறார்கள்.. வணங்கி வாழ்த்துகிறோம்..

  • ko ra -

    Please dont get disheartened sir.. You are a rare specimen in judiciary. keep up the spirit. Happy to see you listening to your conscious. Let your tribe grow.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்