Load Image
Advertisement

மத உணர்வை புண்படுத்த கூடாது: உதயநிதிக்கு உத்தவ் தாக்கரே அணி "அட்வைஸ்"

Sanatana Dharma: Dont hurt religious sentiments: Uddhav Thackerays team atties to Udhayanidhi    மத உணர்வை புண்படுத்த கூடாது: உதயநிதிக்கு உத்தவ் தாக்கரே அணி "அட்வைஸ்"
ADVERTISEMENT

மும்பை: மத உணர்வை புண்படுத்த கூடாது என சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு உத்தவ் தாக்கரே அணி எம்.பி சஞ்சய் ராவத் அறிவுரை வழங்கி உள்ளார்.

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திமுக இடம்பெற்றுள்ள "இண்டியா" கூட்டணியிலும் இது எதிரொலித்தது. திரிணமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே -சிவசனோ உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பது திமுக கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, உத்தவ் அணி எம்.பி சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது: ஒரு அமைச்சராக இருந்து கொண்டு உதயநிதி இப்படி பேசியதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். இது போன்ற கருத்துகளை சொல்வதை தவிர்த்து இருக்க வேண்டும். இது திமுக அல்லது உதயநிதியின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால் நாட்டில் சுமார் 90 கோடி ஹிந்துக்கள் வாழ்கிறார்கள்.

மற்ற மதத்தினரும் இருக்கிறார்கள். அவர்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டும். புண்படுத்த கூடாது. நாட்டின் நிலைமை மேலும் மோசமாகி விட கூடாது. எங்களது கூட்டணியை தாக்குவதற்கு இது போன்ற வெடிப்பொருட்கள் பாஜ.,வினருக்கு கிடைத்து விடக் கூடாது.

திமுக தலைவர் ஸ்டாலினை நாடே கவனிக்கிறது. பாஜ.,வுக்கு எதிரான போரில் அவர் எங்களுடன் சேர்ந்து உள்ளார். எனவே அவருடன் நெருக்கமாக இருப்பவர்கள் இது போன்ற கருத்துகளை சொல்வதற்கு முன் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (35)

  • p.s.mahadevan - chennai,இந்தியா

    முதல்வரான அவருடைய தந்தையும் தமிழகத்தில் உள்ள அவரது கூட்டாளிகளும் ஆதரிக்கிறார்களே.

  • பேசும் தமிழன் -

    இந்து விரோத கொள்ளை கூட்டத்தின் நடுவே ....திரு பாலா சாஹேப் தாக்கரே அவர்களின் மகன் உத்தவ் தாக்கரே அவர்களை பார்க்கும் போது....மனது வலிக்கிறது !!!

  • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

    இதுவே திரு பால தாக்கரே அவர்களாக இருந்தால், வெட்டி விட்டிருப்பார். இவர் என்னமோ அட்வைஸ் செய்து பம்மறாரு

  • GANESUN - Chennai,இந்தியா

    //தேசிய கட்சியின் முதுகுல குத்திட்டு மாற்று அணியில் தஞ்சம் புகுவது அவங்க அரசியல் கணக்கு// சரிதான்.. ஏற்கனவே சைமன் மூலமா சிக்னல் குடுத்தாச்சி "காங்கிரஸ்ஸை விட்டு வெளியே வந்தால் கூட்டனிக்கு தயார்"ன்னு.

  • அருண் பிரகாஷ், மதுரை -

    😂😂😂😂😂😀😀😀😀😀😀😃😄😁😅🤣🤣...அச்சச்சோ போச்சா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்