Load Image
Advertisement

பா.ஜ., கூட்டணி குறித்து பேச அ.தி.மு.க.,வினருக்கு தடை

Palanisamy :ADMK bans people from talking about alliance with BJP   பா.ஜ., கூட்டணி குறித்து பேச அ.தி.மு.க.,வினருக்கு தடை
ADVERTISEMENT
'தமிழக பா.ஜ., தலைமையுடன் நல்லுறவு இல்லாத நிலையில், பா.ஜ., உடனான கூட்டணி குறித்து பொது வெளியில் யாரும் எதுவும் பேச வேண்டாம்' என, அ.தி.மு.க.,வினருக்கு அக்கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அ.தி.மு.க., இருப்பதாக, பா.ஜ., தேசிய தலைமை அறிவித்தாலும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே நல்லுறவு இல்லாத நிலை உள்ளது. ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அளித்த பேட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் என, மோதல் நடந்த நிலையில், கசப்பு தொடர்கிறது.

கடந்த மாதம் 20ம் தேதி, மதுரையில் அ.தி.மு.க., மாநில மாநாடு நடந்தது. இம்மாநாட்டுக்கு பணம் கொடுத்து மக்கள் அழைத்து வரப்பட்டதாக, அண்ணாமலை பேசியதாக வெளியான தகவல், அ.தி.மு.க., தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து எதிர்வினையாற்ற, கட்சி நிர்வாகிகள் விரும்பினர். ஆனால், கட்சி தலைமை பா.ஜ., குறித்து எதுவும் பேச வேண்டாம் என, தடை விதித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., கூட்டணியை விரும்பாதது போல் உள்ளது. எனினும் தேசிய தலைமை கூட்டணியை விரும்புவதாலும், தி.மு.க., கூட்டணி வலுவாக இருப்பதாலும், அண்ணாமலை குறித்தோ, பா.ஜ., குறித்தோ தற்போதைக்கு விமர்சிக்கவேண்டாம். டிசம்பர் வரை அமைதி காப்போம். அதன்பிறகு சூழ்நிலைக்கேற்ப கூட்டணியை இறுதி செய்வோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருப்போம். கூட்டணியில் இருந்து பா.ஜ., வெளியேற விரும்பினால் வெளியேறட்டும். நாமாக வெளியேற்ற வேண்டாம். வெளியேறவும் வேண்டாம் என, பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் பேசும் போதும், பா.ஜ., குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக, வரும் 10ம் தேதி நடக்கும் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


- நமது நிருபர் -



வாசகர் கருத்து (6)

  • r ravichandran - chennai,இந்தியா

    ஓன்று பட்ட அதிமுக உடன் கூட்டணி கட்சிகள் ஆதரவு இருந்த போதே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், பஞ்சாயத்து தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வியது, இப்போது திமுக கூட்டணி அப்படியே பலமான நிலையில் உள்ளது, பிஜேபி கூட்டணி இல்லையென்றால் , சீமானை விட ஓட்டு குறைவாக பெற்று அதிமுக படு தோல்வி அடையும். பிஜேபி கூட்டணி கிடையாது என்றால் மற்ற கூட்டணி கட்சிகளும் அதிமுக உடன் கூட்டணி வைத்து கொள்ளாமல் போகும் நிலை உள்ளது.

  • அப்புசாமி -

    சரியான நேரம் பார்த்து ஜெயக்குமாரை பா.ஜ மீது ஏவி விடுவோம்.

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இப்போது தான் புத்தி வந்தது. டிவி விவாதங்களில் உங்கள் ஆதரவு நபர்களை நாவடக்கம் துயர் பேச சொல்லுங்கள். ஊடகங்கள் இவர்களை தூண்டிவிடுகின்றன.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இவர்கள் கோபித்துக்கொண்டு போனால், இவர்களுக்குத்தான் நஷ்டம். குளத்துடன் கோபித்துக்கொண்டு ...யை கழுவாமல் போனால் யாருக்கு நஷ்டம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்