Load Image
Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர் ஆன மஹிந்திரா!

Mahindra to sponsor ICC Men's Cricket World Cup 2023  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர் ஆன மஹிந்திரா!
ADVERTISEMENT
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் நடக்கும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஸ்பான்சராக இணைந்துள்ளது.


வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ஐசிசி ஆண்களுக்கான உலகக் கோப்பை போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மஹிந்திரா நிறுவனம் இணைந்துள்ளது.
Latest Tamil News

பொதுவாக ஒவ்வொறு நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பான்சர் செய்வார்கள். இதுவரை டிவி சேனல்கள், தனியார் பேங்க், கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரப்படுத்தி வந்தநிலையில், தற்போது இந்த ஸ்பானர்ஷிப்பில் கார் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வரிசையில், மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் நடக்கும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதன் மூலம் தனது எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என் மற்றும் தார் ஆகிய கார்களை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளது.
Latest Tamil News
இந்த ஸ்பான்சர்ஷிப் எங்கள் பணியில் ஒரு முக்கிய மைல்கல்" இதன்மூலம் எங்கள் நிறுவனம் கோடிக்கணக்கான இந்தியர்களை சென்றடையயும் என்று நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி ஜெஜூரிகர் கூறினார். அதுமட்டுமல்லாமல், மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 70,350 கார்களை விற்பனை செய்து, விற்பனையில் 19 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த ஸ்பான்சர்ஷிப் மூலம்மூலம் விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து (1)

  • KC Arun - Tirunelveli,இந்தியா

    மஹிந்திரா ஆசியா கண்டத்தில் உள்ள நிறைய நாடுகளில் விற்பனை நிலையங்கள் அமைத்துள்ளன. அதையும் தாண்டி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டத்திலும் நிறைய இடங்களில் விற்பனை நிலையங்கள் அமைத்து வாகன சந்தையில் நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவை தாண்டி பல உலக நாடுகளில் அது தடம் பதித்து நீண்ட நாட்கள் ஆகிறது. அதனால் இதன் மூலம் நீங்கள் சொல்வது போல வியாபார விருத்தி ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement