ADVERTISEMENT
வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 recharge )எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து சி40 ரீசார்ஜ் (Volvo C40 recharge )காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் லக்சுரி கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான வால்வோ இதுவரை ப்ரீமியம் செக்மெண்டில் மட்டுமே கார்களை விற்பனை செய்து வருகிறது. இதன் பில்டு குவாலிட்டிக்காகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வால்வோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. அதன்படி, வால்வோ நிறுவனம் முன்னதாக வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எனும் காரை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது c40 ரீசார்ஜ் என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காரில் 78 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்ட (lithium-ion battery pack) இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டும் சேர்ந்து 42 பிஎச்பி பவரையும் 660 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்ற எட்டு மணி நேரம் ஆகும். வெறும் 4.7 நொடியில் 100 கிலோ மீட்டர் வேகத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு முழு சார்ஜில் 530 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லுமாம்.

டிசைனை பொருத்தவரை முன்பக்கம் ஹேமர் வடிவ டிஆர்எல், கருப்பு நிறத்தாலான கிரில், பின்பக்கம், நீளவாக்கில் எல்இடி டெயில் லைட், ஸ்லோப்பிங் ரூப் லைன், பின்பக்க கதவில் பிளாக் லிப்ஸ் ஸ்பாய்லர்கள் உள்ளிட்ட டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, 19 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளன. ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களில் வருகிறது.

இன்டீரியரில், 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பேனரோமிக் சன் ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், அடாஸ் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட எக்கசக வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காருடன், மூன்று ஆண்டு கம்பிஹென்ஸிவ் வாரண்டியும், எட்டு ஆண்டு பேட்டரி வாரண்டி மற்றும் ஐந்து ஆண்டு டிஜிட்டல் சர்வீஸ் வாரண்டி வழங்கப்படுகிறது. இதுபோக 3 ஆண்டு சர்வீஸ் பேக்கேஜ் மற்றும் 3 ஆண்டு ரோடு சைடு அசிஸ்டன்ட் மற்றும் வால் பாக்ஸ் சார்ஜர் ஆகிய பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டல் ஒயிட், ஆக்ஸிக்ஸ் பிளாக், ஃப்யூஷன் ரெட், கிளைவுடு ப்ளூ, சேஜ் கிரீன், ஃபேஜோர்டு ப்ளூ, ஆகிய 6 நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில், ரூ 61.25 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு வருகிறது.
கூடவே ஒரு ஜெனெரேட்டர் எடுத்துட்டு போணுமா?