கண்டி: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் ஆமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது.
தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (செப்.,5) அறிவிக்கப்பட்டது. இலங்கையின் கண்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர், பேட்டர் லோகேஷ் ராகுல் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் தேர்வு செய்யப்படுவதால், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.
வாசகர் கருத்து (12)
தமிழக வீரர்களான இடது கை வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜன் கட்டாயம் அணிக்கு தேவை. அஸ்வின் போன்ற அனுபவம் மிக்க சுழற்பந்து வீச்சாளர் தேவை
மிக மிக கேவலமான அணித்தேர்வு. அகார்கர் வந்து எந்த பயனும் இல்லை. இதுக்கு பருத்திமூட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம். கேப்டன் அணியில் உள்ள இரு பிரிவு (ரோஹித் & கோஹ்லி) வீரர்களில் தன் பிரிவில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை பலத்தை காட்ட, தனக்கு சாதகமான வீரர்கள் ஸுப்மன், சூரியகுமார், கிஷன், ராகுல், பும்ரா, குல்தீப் ஆகியோர்களை கேப்டன் எனும் முறையில் எடுத்துக்கொண்டுள்ளார். பாண்டியா, ஷ்ரேயாஸ், ஷர்துல் பலத்த சிபாரிசில் உள்ளவர்கள். ஷமி, அக்சர் மற்றும் ஜடேஜா திறமையின் அடிப்படையில் தேர்வானவர்கள். கோஹ்லி பக்கம் தான் சிராஜ் தவிர ஆள் இல்லை. இந்த அணி தேறுமா அல்லது தேறாதா என இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும். திறமைக்கு இந்திய கிரிக்கெட்டில் இடமில்லை. மும்பை வாழ்கிறது கிரிக்கெட் தேய்கிறது.
செந்தமிழ் ஹாப்பி
இந்திய அணிக்காக இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.சாகல் இடம்பெறவில்லை...இடது கை பேட்டர்கள் குறைவு.
Better boycott watching all ICC matches...