1998ல் ஸ்வீடன் காரான சாப் 9-5 மாடலில் தான் முதன் முறையாக வென்டிலேட்டட் சீட்டுகள் பொருத்தப்பட்டன. லெதர் சீட்டுகளில் துளையிட்டு முதுகுப் பகுதி மற்றும் கீழ் புறத்தில் பேன்களை பொருத்தி சூடான காற்றை இழுத்து வெளித்தள்ளி அதன் மூலம் குளிர்ச்சியை உணர வைத்தது. தற்போது 2 வகையான வென்டிலேட்டட் இருக்கைகள் உள்ளன. ஒன்று மேலே கூறியது போல் பேன் மூலம் உடலின் வெப்பத்தை வெளியேற்றி குளிர்ச்சியை உணர வைப்பது. மற்றொன்று மினி கன்டன்சர் யூனிட் மூலம் குளிர்ந்த காற்றை இருக்கை வழியாக நமக்கு கடத்துகிறது. ஆனால் இது சிக்கலான விலையுயர்ந்த செயல்முறை. தற்போது வென்டிலேட்டட் சீட் கொண்ட இந்திய கார்களை பார்ப்போம்.
டாடா நெக்ஸான்
டாடாவின் பிரபலமான காம்பாக்ட் எஸ்.யூ.வி.,யான நெக்ஸானில் இந்த வென்டிலேட்டட் சீட் உண்டு. XZ பிளஸ் டார்க் எடிஷன் வகையில் இது கிடைக்கிறது. இதன் சென்னை ஆன்ரோடு விலை ரூ.14 லட்சம் ரூபாய்.
கியா சோனெட்
விற்பனையில் சக்கைப் போடு போடும் கியா சோனெட்டின் HTX பிளஸ், GTX பிளஸ் வகையில் இந்த வென்டிலேட்டட் சீட் கிடைக்கிறது. முன்பக்க இரு இருக்கைகளில் மட்டுமே இது உண்டு. இதன் ஆன்ரோடு விலை ரூ.16 லட்சம் வரை வரும்.
மாருதி சுசூகி XL6
மாருதி சுசூகியின் இந்த காரின் ஆல்பா பிளஸ் வகையில் முன் பக்க இரு இருக்கைகள் வென்டிலேட்டட் அம்சம் கொண்டவை. மாருதி சுசூகி XL6 சென்னை ஆன்ரோடு விலை ரூ.15.6 லட்சம்.
ஹூண்டாய் வெர்னா
கியா சோனெட்டிற்கு முன்பு காற்றோட்டமான இருக்கைகளுடன் வந்த மிகவும் மலிவு விலை கார் என்ற பெருமையை வெர்னா பெற்றிருந்தது. அதே போல் ஸ்கோடா ஸ்லாவியாவிற்கு முன்பு செடான் காரில் இதில் மட்டுமே வென்டிலேட்டட் இருக்கை இருந்தது. இதன் SX(O) மாடலில் இந்த அம்சம் கிடைக்கிறது. ஹூண்டாய் வெர்னா SX(O) ஆன்ரோடு விலை ரூ.17.8 லட்சம்.
ஸ்கோடா ஸ்லாவியா
இதன் ஸ்டைல் எனும் மாடலில் முன் இருக்கைகள் வென்டிலேட்டட் வசதி கொண்டவை. இதன் பேன் சத்தம் எழுப்புவதாக விமர்சனங்களும் உண்டு. இதன் சென்னை ஆன்ரோடு விலை ரூ.17.4 லட்சம்.
ஸ்கோடா குஷாக்
இந்தியாவில் ஸ்கோடாவின் மிகவும் மலிவு விலை எஸ்.யூ.வி., இது. இதிலும் ஸ்டைல் மாடலில் ஸ்லாவியா செடானின் அதே இருக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆன்ரோடு விலை ரூ.18.6 லட்சம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!