மேட்டுப்பாளையம்: மின்கட்டண உயர்வு, நுாற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நுால்களுக்கு போதிய விலை கிடைக்காதது போன்ற பல காரணங்களால், நுாற்பாலைகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால், கோவை புறநகர் பகுதிகளில், பல்லாயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக, ஜவுளித்தொழில் அதிக வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. நுாற்பாலைகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் செயல்பட்டு வருகின்றன.
இதில் பெருவாரியான கிராமப்புற பெண் தொழிலாளர்களும்,புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.கோவை மாவட்ட புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், அன்னுார், சோமனுார், சூலுார் உட்பட பகுதிகளில் மட்டும், 250க்கும் மேற்பட்ட சிறு நுாற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பருத்தி கொள்முதல் விலைக்கு ஏற்றார்போல் நுால் உற்பத்தி விலை இல்லாதது போன்ற பல காரணங்களால், நுாற்பாலைகள் தொடர்ந்து இயக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால், கிராமப்புற தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிறுநூற்பாலைகள் கூட்டமைப்பு செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் கூறியதாவது:
நுாற்பாலைகள் சில மாதங்களாகவே, தங்களது நுால் உற்பத்தியை குறைத்து வருகின்றன. பல மாதங்களாக வங்கிகளின் வட்டி விகிதங்கள் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இதனால், நுால் உற்பத்தி செலவு 1 கிலோவுக்கு ஐந்து ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பஞ்சு கொள்முதல் விலைக்கு ஏற்ப, நுால் உற்பத்தி செலவு இல்லை. ஒரு கிலோவுக்கு, சுமார் ரூ.20 வரை நஷ்டம் ஏற்படுகிறது. தமிழகத்தில் நுாற்பாலைகள் மற்றும் ஓ.இ., மில்களின் எண்ணிக்கை, 1,500 ஆக உள்ளன. தினமும் 70 லட்சம் கிலோ நுால்கள் தயார் செய்யப்படுகின்றன.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என கோவை மண்டலத்தில் மட்டும் சுமார், 500 நுாற்பாலைகள் உள்ளன. கோவை மாவட்ட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
நுாற்பாலைகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர்த்தப்பட்ட வங்கிகளின் வட்டி விகிதங்களை உடனடியாக பழைய நிலைக்கு, அதாவது 7.75 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்து கொடுக்க வேண்டும்.
தமிழக மின் உற்பத்தி கழகம் மேக்ஸிமம் டிமாண்ட் கட்டணம், 90 சதவீதம் வசூலிக்கிறது.
நுாற்பாலை தொழிலின் அசாதாரண சூழ்நிலையை கருதி, உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப மேக்சிமம் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.
கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து (13)
Many textile mills invested in windmill projects near Udumalaipettai.Dharapuram etc.The power generated should be properly utilised in their mill power consumption.
திராவிட மாடல் ஸ்டாலின் தான் வந்தாரு விடியல்தான் தந்தாருண்ணு சொல்லி குதுகளித்து பாடி மகிழ்ந்து ஸ்வீட் எடு கொண்டாடு தமிழா...
மத்திய மாநில அரசுகள் வெட்டி செலவை குறைத்தால் வட்டி விகிதம் குறைக்க முடியும் ஒரு குடும்பத்திற்கு எப்படிவெட்டி செலவு கூடாதோ அது போல அரசுக்கும் வெட்டி செலவு கூடாது
இதுபோன்ற பிரச்சினைகள் முதல்வருக்கு தெரிவதில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் எங்கள் அரசு இப்படி சாதித்தது, அப்படி சாதித்தது, இந்தியாவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எங்கள் அரசு என்று கூட்டம் போட்டு தம்பட்டம் அடித்து தற்பெருமை பேசிக்கொண்டு காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறார்
தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் கடந்த சில மாதங்களாக நூல் விலை குறைவாகவும் உற்பத்தி செலவு அதிகம் காரணமாக நூற்பாலைகளில் நூல் உற்பத்தி குறைந்து வருகிறது.. தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் மீண்டும் முழுமையாக இயக்கவும் நூல் உற்பத்தி செலவு மற்ற மாநிலங்களை விட சற்று குறைவாக இருக்க வேண்டும் அதற்கு தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் அப்போது தான் தொடர்ந்து நூற்பாலைகளில் நூல் உற்பத்தியில் தமிழ்நாடு எப்போதும் முதன்மையாக இருக்கும் நன்றி