ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் வரும் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
இதில், இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம், 66, சீன வம்சாவளிகளான இங் கொக் செங், 76, டான் கின் லியான், 75, ஆகியோர் போட்டியிட்டனர். காலை 8:00 மணி துவங்கி இரவு 8:00 மணி வரை நடந்த தேர்தலில், 27 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் ஓட்டை பதிவு செய்தனர்.
இதையடுத்து, நேற்று இரவே ஓட்டுகள் எண்ணப்பட்டு, இரவு 10:00 மணியளவில் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், தர்மன் சண்முகரத்னம், 70 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக இங் கொக் செங், 15.7 சதவீதமும், டான் கின் லியான் 13.88 சதவீதமும் ஓட்டுகளை பெற்றனர்.
“இந்த வெற்றியின் வாயிலாக வருங்கால வளர்ச்சியை சிங்கப்பூர் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்,” என தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், ஏற்கனவே சிங்கப்பூர் துணை பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
வாசகர் கருத்து (4)
தமிழ் பேச தெரியாத இலங்கையை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி யை சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். இவருடைய மனைவி சீனாவை சேர்ந்தவர் , சிங்கப்பூர் தேசிய பல்கலை கழகத்தில் இவருடைய சீனா மனைவி படித்துக்கொண்டிருந்த போது தருமனுக்கு இவருக்கும் காதல் மலர்ந்தது. சீனா வை சேர்ந்த அப்பாவுக்கும், ஜப்பான் அம்மாவுக்கும் பிறந்தவர் தருமன் மனைவி ஜென் யுமிக்கோ. சீனா கம்யூனிஸ்ட் ல் உள்ள வெளியுறவு தலைமை அதிகாரியான வாங் வெங்பின் நின் மூத்த சகோதரர் மகள் தான் தர்மன் சண்முகரத்தினம் மனைவி. இந்தியர்களுக்கு துளியும் பிரயோசனம் இல்லாதவர். தர்மன் சண்முகரத்னம். தமிழகத்திலிருந்து சென்று அங்கு குடியுரிமை எடுத்துள்ள தர்மன் சண்முக ரத்தினத்திற்கு வாக்களித்தவர்கள். அங்கேயே பிறந்து வளர்ந்த இந்தியர்களுக்கு, தமிழர்கள் தர்மன் சண்முக ரத்தினத்திற்கு வாக்கு ஆதரவு தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமிதத்திற்கான நேரம்
இவர் ஈழ தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்