Load Image
Advertisement

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு!: எங்களுக்கே இல்லை என கர்நாடகா கைவிரிப்பு!

 Order to open water to Tamil Nadu!: Karnataka insists that it is not ours!    தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு!: எங்களுக்கே இல்லை என கர்நாடகா கைவிரிப்பு!
ADVERTISEMENT

புதுடில்லி: டில்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

டில்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் பங்கேற்றனர். தமிழகத்திற்கு 5000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இந்த முடிவை ஏற்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கூட்டத்தில், கர்நாடகத்தில் அனைத்து அணைகளிலும் போதுமான நீர் இருப்பு இல்லை. 47சதவீத அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதால், குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (22)

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    அங்கே பதவியேற்புக்கு இங்கிருந்து போயி வாழ்த்து தெரிவித்த மானஸ்தர்களை தேடிக்கிட்டிருக்கேன் ....

  • BALU - HOSUR,இந்தியா

    தனது ஆட்சிக்காலம் முழுவதும் காவிரிப் பிரச்சினை வராமல் சிறப்பான ஆட்சி செய்த எடப்பாடி பழிநிசாமியை மறந்து விட்டு,பொய் வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றிய திமுக-வுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்து திருடர்கள் கையிலேயே சாவியைக் கொடுத்த நன்றி கெட்ட டெல்டா மாவட்ட மக்களே இப்போது அதற்கான கர்மாவை அனுபவியுங்கள்.

  • panneer selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    It is already happened during monsoon failure , Karnataka refused to abide the ruling of Cauvery Council as well as Supreme Court directive . At that time Kalaingar could not do anything even though DMK was in Central Ministry . Hence present Stalin also will not do anything except some token announcement , herioic dialogue and some more demonstration . It is the farmers who will suffer at this critical juncture .

  • Ganapathy - chennai,இந்தியா

    வரும் 2024 பொதுத்தேர்தலில் இ.ந்.தியா. கூட்டணியின் தோல்வி இப்பொழுதே உறுதியாகிவிட்டது

  • theruvasagan -

    எங்களை பார்த்து பாஜக பயப்படுதுன்னு நா கூசாம அடிச்சு விடறவங்களுக்கு கர்நாடகா தண்ணி தராம தண்ணி காட்டுதே அங்கதான் இவங்க வீரம் பல் இளிச்சிகிட்டு நிற்குது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்