ADVERTISEMENT
சென்னை: சென்னை, மூலக்கடை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன், 56. இவர், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது மேம்பாலத்தில் கீழே நான்கு சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தனர். அவர்களிடம் பாலமுருகன் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
மேலும் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், திடீரென பாலமுருகனை கையாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கினர். இதில் முகத்தில் படுகாயமடைந்த பாலமுருகன் கத்தவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொதுமக்களை பார்த்த கஞ்சா போதை சிறுவர்கள் தப்பி ஓடினர். இது குறித்து விசாரித்த ஆர்.கே.நகர் போலீசார் நான்கு சிறுவர்களையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து (19)
இவர்கள் சிறுவர்கள் அழைக்கப்பட தகுதியியற்றவர்கள் . ஒவ்வொருத்தனின் கை மற்றும் காலை உடைப்பது நல்லது . இது சரியாக ஒரு ஆறு மாதம் ஆகும் . அதற்குள் ஒழுங்கான மன மாற்றத்தை எதிர் பார்க்கலாம் ,
கஞ்சா விடியல்
டி ஜி பி என்ன செய்கிறார்? காவலர்கள் தாக்கப்படுவது இது 100 தடவையாவது இருக்கும். அப்படியும் அறிவு இல்லையா? கஞ்சா விற்பவர்களை பிடிக்க துப்பில்லை
பான்பராக் வாயன்களை மிஞ்சும் விதமாக கஞ்சா வாயன்கள் என்று புதிய அடையாளம் கொடுத்த விடியலுக்கு நன்றி.... இதிலும் நம்ம தான் முதன்மை மாநிலம்ன்னு பெருமையாக கூறலாம்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
டுமீல் நாடு வல்லரசு ஆகிவிட்டது .... உலகிலேயே, ஏன் இந்த அண்டசராசரத்திலேயே முதல் மாநிலம் .... கிக்கிக்கீக்க்கி .......