Load Image
Advertisement

சிறார் குற்றங்களில் தமிழகம் முதலிடம்

தஞ்சாவூர்: ''சிறார் குற்றங்களில், தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது,'' என, மனநல மருத்துவ கழகத்தின் மாநில தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Latest Tamil News


தஞ்சாவூரில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 33 சதவீதம் பேர் உள்ளனர். தற்போது, மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுதல், போதைப் பொருள் உபயோகித்தல், அவர்களுக்கு தற்கொலை எண்ணம் போன்ற மனநல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இந்தியாவின் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ள தகவலில், 6 முதல் 7 சதவீத சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதில் ஆண்கள் 80 சதவீதம், பெண்கள் 20 சதவீதம்.

சிறார் குற்ற பதிவுகளில், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பீஹாருக்கு அடுத்ததாக, தமிழகம் உள்ளது. தென் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில், 16.4 சதவீத இளம் வயதினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இளம் வயதினரிடம் போதைப்பொருள் பழக்கம், 15 சதவீதம் உள்ளது. 15 வயதுக்கு உள்பட்டவர்களில், 50 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப் பொருளைப் பயன்படுத்தி உள்ளனர்.

Latest Tamil News

ஒரு லட்சம் மாணவர்களில், 6 - 8 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகம். தற்கொலைக்கு மன அழுத்தம், போதைப்பொருள் உபயோகித்தல், பெற்றோர், ஆசிரியர்களை திருப்திப்படுத்த முடியாமை போன்றவை தான் இதற்கு காரணம்.
இதை தடுக்க மன நல ஆலோசனை, முறையான கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர்களுக்கு வழிகாட்டுதல், விளையாட்டு, தொழில் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுத்துதல் வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (14)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    மற்ற குற்றங்கள் கூட தமிழகத்தில் அதிகம்.

  • Rajasekaran - Chennai,இந்தியா

    தமிழ்நாடு பாட நூல் கழகத்தை கலைத்து விடலாம்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அந்நாட்களில் பள்ளி வாயிலில் முறுக்கு, கடலைமிட்டாய், மாங்காய் பத்தை விற்பார்கள் இன்று மிட்டாய் ,சாக்லேட் போல போதை தின்பண்டங்கள் கிடைக்கிறது பாக்கெட் மணி கட்டிங்க் வணக்கப் போகிறது விரைவிலேயே மாநிலம் இல்லை, அகில இந்திய போதைத்தலைநகர் என்ற அந்தஸ்து கிடைத்துவிடும் வாழ்க திராவிட மாடல்

  • ராஜ் -

    விடியல் அரசின் சிறப்பு. எஸ்ஐ கல்லால் அடித்த நிகழ்ச்சி. இதை இந்தியா முழுவதும் பரப்ப தீயமூக இளைங்கர்கள அழைக்கிரார் நம் விடியா அரசின் முதல்வர்

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    விடியல் அரசின் கீழ் தமிழகம் பீடுநடை போடுகிறது... அகில இந்திய அளவில் முதலிடம் பெரும் நாள் தொலைவில் இல்லை ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement