Load Image
Advertisement

உலக தடகளம்: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

World Athletics Champs: Neeraj Chopra wins gold   உலக தடகளம்: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ADVERTISEMENT
புடாபெஸ்ட்: உலக தடகளத்தின் ஈட்டி எறிதல் பைனலில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தூரம் எறிந்து தங்கம் வென்றார். நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.77 மீ., துாரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான மானு , கிஷோர் ஆகியோரும் பைனலுக்கு முன்னேறினர்.

இந்நிலையில், இன்று நடந்த பைனலில், தனது 2வது முயற்சியில் 88.17 மீ., தூரம் வீசிய நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம், இந்தியாவுக்கு உலக தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார். மேலும், உலக தடகளத்தில் இரு பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அவர் கடந்த முறை (2022, அமெரிக்கா) வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கிஷோர் 5வது இடமும், மானு 6வது இடமும் பிடித்தனர். பாகிஸ்தான் வீரர் நதீம் வெள்ளி வென்றார். செக் குடியரசை சேர்ந்த ஜாகுப் வெண்கலம் வென்றார்.

நீரஜ் வென்ற தங்க பதக்கங்கள்:



ஒலிம்பிக் 2020
உலக தடகளம் 2023
டைமண்ட் லீக் 2022
ஆசிய விளையாட்டு 2018
காமன்வெல்த் 2018
ஆசிய சாம்பியன்ஷிப் 2017
தெற்கு ஆசிய விளையாட்டு 2016

* 2022 உலக தடகளத்தில் வெள்ளி


பிரதமர் வாழ்த்து






பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது.

அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், விளையாட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையளமாக ஆக்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.



வாசகர் கருத்து (13)

  • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

    வாழ்த்துக்கள் நீரஜ் வாழ்க வளமுடன்

  • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

    இங்கு தமிழர்கள் ஒரங்கட்டப்படுவதாக கூப்பாடு போடுவார்கள் ஆனால் ஒரு சில மாதங்கள் முன்பு தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ளாமல் போனதற்கு யார் காரணம் என்று அனைவருக்கும் தெரியும் கேட்டால் கம்மியுநிகேசன் கேப் என்று மூடி மறைத்து விடுவார்கள்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    மனமார்ந்த வாழ்த்துக்கள் நீரஜ் அவர்களுக்கு. நீங்க மேன்மேலும் சாதிக்கவேண்டும்.

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    medal பரிசு தொகையில GST எவ்வளவு,

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    தமிழர் ஒரங்கட்டுவது 1950 லே தொடங்கிவிட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்