Load Image
Advertisement

பிரதமர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்: சீமான் பேச்சு

 I will contest against PM if he contests in Ramanathapuram: Seeman speech  பிரதமர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்: சீமான் பேச்சு
ADVERTISEMENT

தூத்துக்குடி: பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். முஸ்லிம் இல்ல திருமண விழாவில் சீமான் பங்கேற்றார். முஸ்லிம் மக்கள் பலரும் புடைசூள அவரை வரவேற்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடந்த கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: எப்போது என்னை நம்பப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தமிழகத்தில் மோடி போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும். ஏனெனில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்.

உண்மையிலே இவன் ‛டப்' தான் கொடுக்கிறான்; சண்டை போடுகிறான் என்று என்னை நம்புவீர்கள். நான் பேசியது பல ஆண்டுகளாக தாங்கி வரும் வலியின் மொழிதானே தவிர இஸ்லாமியர்களுக்கு வலியை ஏற்படுத்தும் எண்ணமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், சீமான் பேசியதாவது: இஸ்லாம் என்பது அநீதிக்கு எதிராக வந்த புரட்சி என்று பழனிபாபா சொன்னார். உங்களுக்காக அதிகமாக பேசியது நான் தான். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை தேசிய இனமான தமிழினத்தின் மக்கள். அவர்களை சிறுபான்மையினர் என எப்படி கூற முடியும்? ஒருவர் மதம் மாறிவிடலாம். அவர்களின் மொழியையும், இனத்தையும் மாற்றிவிட முடியுமா?

ஈ.வெ.ரா கூறியது போல நான் பேசியதில் நல்லது ஏதாவது இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக இருந்தால் விட்டுவிடுங்கள். சிறுபான்மையினர் என்றால் சலுகை கிடைக்கும் என்கிறீர்கள். என்ன சலுகை கிடைத்துவிட்டது உங்களுக்கு? உரிமைதான் நமக்கு வேண்டுமே தவிர சலுகை அல்ல. அனைத்து மதங்கள் போதிப்பது பேரன்பு. நாங்கள் மதத்தை தாண்டிய மானுட நேயம் முக்கியம் என்று நினைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (28)

 • Sck -

  போட்டி போடலாம், டெபாசிட் கிடைக்கும்னு எல்லாம் எதிர்பார்க்க கூடாது. புரியுதா தம்பி. சரி போய் ஓரமா உட்காரு. கூப்புடுறோம்.

 • ராமகிருஷ்ணன் -

  வை கோ மற்றும் திமுகவினர் புளுகுவதற்கு போட்டியாக கிளம்பி விட்டார் 😜

 • பேசும் தமிழன் -

  அவர் வாரணாசியில் போட்டியிடுகிறார் ....அங்கு போய் பொட்டியிடு....நீ தான் தைரியமான ஆள் ஆயிற்றே !!!!

 • venugopal s -

  இத்தனை நாட்களில் இன்று தான் சீமான் உருப்படியாக அறிவுபூர்வமாக பேசி இருக்கிறார், வாழ்த்துக்கள்!

 • G.Kirubakaran - Doha,கத்தார்

  ஒரு தலைவன் தன்னுடைய , சொந்த முயட்சி,மக்கள் னால பனி என்பதில் தான் அடங்கி உள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்