திருவாரூரில் நாகை எம்.பி., செல்வராஜின் இல்ல திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவை காப்பாற்றத்தான் இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக தான்.
இந்தியா கூட்டணி உருவாக தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி காரணமாக அமைந்துள்ளது. பிரதமர் எங்கு சென்றாலும் இந்தியா கூட்டணி குறித்து கொச்சைப்படுத்தி பேசுகிறார். தமிழகத்தை நாம் காப்பாற்றி விட்டோம். இப்போது இந்தியாவை காப்பாற்ற வேண்டி உள்ளது.
ஊழல் பற்றி பேச பாஜ.,வுக்கு மோடிக்கு அருகதை உண்டா? மத்திய அரசின், பாரத்மாலா, துவாராக விரைவுச்சாலை உள்ளிட்ட 7 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி கூறியுள்ளது. இவர்கள் தான் ஊழலை ஒழிக்க போவதாக நாடகமாடுகின்றனர். அவர்கள், தங்களது தப்பை மூடிமறைத்து நம் மீது வீண்பழி சுமத்துகினறனர். இதனை பற்றி திமுக பேசுவதால் சிபிஐ, வருமான வரித்துறை மூலம் மிரட்டுகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து (94)
ஊருக்குள்ள அனைத்து ஊழல் வேலைகளை செய்த இவன் I.N.D.I.A. 28 ஊழல் திருடர்கள் கூட்டணி நிலைக்காது யார் பிரதமர் வேட்பாளர் என்ற தலைப்பில் இவர்களுக்குள் அடித்து கூட்டணியை சுக்குநூறாக உடைப்பார்கள் என்பதே நடக்கும். ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்க லாயக்கற்றவர் கள்ளச்சாராயம், போதைப்பொருள் வியாபாரிகளே கோபாலபுரம் தெலுங்கு ஸ்டாலின் 17 குடும்பங்கள் ஊழல்வாதிகள் இவர்களே ? இவர்கள் எப்படி இந்தியாவை காப்பாற்றுவார்கள்? தமிழர்களை கிறுக்கனுங்க இளிச்சவாயனுங்க என்று ஸ்டாலின் நினைப்பு இவர் பொழப்பை கெடுக்கும் தமிழ்நாட்டு மக்கள் இனி ஊழல் பொய்யர்கள் திமுகவை நம்பமாட்டார்கள் 517 கொடுத்தவாக்குறுதிகளில் ஒன்று கூட செய்ய வக்கில்லை விக் தலையர் ஸ்டாலினுக்கு. பின் பல பொய்களை தினமும் பேசி தமிழர்களை முட்டாள்களாகிறார் அது இனி நடக்காது ? பாஜக - அதிமுக கூட்டணிகள் தான் தமிழ்நாட்டில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 39 / 39 MP க்களை பெற்று அமோக வெற்றி பெறுவார்கள். திமுக DRAVID AMODEL ஊழல் கொள்ளையர்கள் இம்முறை டெபாசிட் இழப்பது உறுதி
இப்போ வரைக்கும் டாஸ்மாக்ல 10 ருபாய் எதற்கு அதிகம் வாங்கினார்கள் என்று கூற முடியவில்லை இதில் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிக்க போறாங்களாம்
புள்ளி வைத்த உங்களிடம் இருந்து...நாட்டை ...நாட்டு மக்கள் எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்று கண்டிப்பாக நம்புகிறோம் ..உங்களுக்கு ஓட்டு போடுவது .
ஊழல் அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து தம்மை காத்து கொள்ள நடிக்கிறார். 2 பேச்சு வார்த்தையில் இவர் பேசிய வீடியோ 🎥 வந்திருக்கா. 😜
கட்டுமர குடும்ப கூட்டம் ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது. புள்ளி கூட்டணிக்குள்ள புகுந்துட்டா மட்டும் தப்ப முடியுமா?