Load Image
Advertisement

பாஜ., அரசின் செயல்பாடு எப்படி?: ‛இந்தியா டுடே இதழ் சொல்லுது இப்படி!

How is the functioning of the BJP and the government?: India Today magazine says this   பாஜ., அரசின் செயல்பாடு எப்படி?: ‛இந்தியா டுடே இதழ் சொல்லுது இப்படி!
ADVERTISEMENT

புதுடில்லி: அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பாரா, மத்திய அரசின் செயல்படுகள் குறித்து ‛ இந்தியா டுடே' இதழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ‛ இந்தியா ' கூட்டணி தயாராகி வருகின்றன. அடுத்து மீண்டும் மோடியே பிரதமராக பதவியேற்பார் என பா.ஜ., உறுதிபட தெரிவித்துள்ளது. பா.ஜ.,வை வீழ்த்துவோம் என எதிர்க்கட்சி கூட்டணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த பிரதமர் யார், எந்த கட்சி ஆட்சி அமைக்கும், அதற்கான காரணங்கள், அரசின் செயல்பாடுகள் குறித்து ‛ இந்தியா டுடே ' இதழில் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது

கூட்டணி ரீதியில்



தே.ஜ., கூட்டணி 43 சதவீத ஓட்டுகளுடன் 306 தொதிகளும்
இந்தியா கூட்டணி 42 சதவீத ஓட்டுகளுடன் 193 தொகுதிகளும்
மற்ற கட்சி கூட்டணிகள் 16 சதவீத ஓட்டுகளுடன் 44 தொகுதிகளும் கிடைக்கும்

கட்சி ரீதியில்



பா.ஜ., 38 சதவீத ஓட்டுகளுடன் 287 தொகுதிகளும்
காங்கிரஸ் 20 சதவீத ஓட்டுகளுடன் 74 தொகுதிகளும்
மற்ற கட்சிகள் 42 சதவீத ஓட்டுகளுடன் 182 தொகுதிகளும் கிடைக்கும்.

மோடி செயல்பாடுகள்



பிரதமராக மோடியின் செயல்பாடுகள்
திருப்திகரமாக உள்ளதாக 42 சதவீதம் பேரும்
நன்றாக உள்ளதாக 21 சதவீதம் பேரும்
சராசரியாக உள்ளதாக 13 சதவீதம் பேரும்
மோசம் என 12 சதவீதம் பேரும்
மிக மோசம் என 10 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாதனை



தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய சாதனையாக
கோவிட் பெருந்தொற்றை கையாண்டது என 21 சதவீதம் பேரும்
ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்கியது என 13 சதவீதம் பேரும்
காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது என 12 சதவீதம் பேரும்
அயோத்தி ராமர் கோயில் மற்றும் காசி விஸ்வநாத காரிடர் அமைப்பது என 11 சதவீதம் பேரும்
நலத்திட்டங்கள் செயல்படுத்தியது என 6 சதவீதம் பேரும்
உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் என 7 சதவீதம் பேரும்
பாகிஸ்தான் மற்றும் சீனாவை கையாண்டது என 2 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

திருப்தி



விவாதங்களில் மோடியின் செயல்பாடுகள் சிறப்பானதாக உள்ளதாக 63 சதவீதம் பேரும், மோசமாக உள்ளதாக 22 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்

தேஜ., கூட்டணி அரசின் செயல்பாடுகள்
திருப்தி அளிப்பதாக 59 சதவீதம் பேரும்
திருப்தியும் இல்லை, அதிருப்தியும் இல்லை என 19 சதவீதம் பேரும்
திருப்தி இல்லை என 14 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்

தோல்வி



தேஜ கூட்டணி அரசின் தோல்வி என எதை கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு
விலைவாசி உயர்வு, பணவீக்கம் - 25 சதவீதம் பேரும்
வேலைவாய்ப்பின்மை - 17 சதவீதம் பேரும்
பொருளாதார வளர்ச்சி - 12 சதவீதம் பேரும்
கோவிட் பெருந்தொற்றை கையாண்ட வீதம்-9 சதவீதம் பேரும்
ரூபாய் நோட்டு வாபஸ் - 3 சதவீதம் பேரும்
மதக்கலவரம் மற்றும் சிறுபான்மையினர் இடையே பயம் ஏற்பட்ட விவகாரம் -5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

பெரிய பிரச்னை



இந்தியா தற்போது சந்திக்கும் பெரிய பிரச்னை எது என்ற கேள்விக்கு
விலைவாசி உயர்வு விவகாரம் - 24 சதவீதம் பேரும்
வேலைவாய்ப்பின்மை - 17 சதவீதம் பேரும்
வறுமை - 8 சதவீதம் பேரும்
முறைகேடு - 5 சதவீதம் பேரும்
விவசாய பிரச்னை - 5 சதவீதம் பேரும்

பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை பொது மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கலவரத்திற்கு காரணம்



மணிப்பூர் கலவரத்திற்கு யார் என காரணம் என்ற கேள்விக்கு
மத்திய அரசு - 30 சதவீதம் பேரும்
மாநில அரசு - 25 சதவீதம் பேரும்
மோதலில் ஈடுபட்ட இரண்டு சமுதாயங்கள் - 20 சதவீதம் பேரும்
எதிர்க்கட்சிகள் - 14 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

அதேபோல்,

மணிப்பூரில், முதல்வரை நீக்கிவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என 44 சதவீதம் பேரும்
இரண்டு குழுக்கள் இடையே விரைவாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என 21 சதவீதம் பேரும்
விரைவான நீதி விசாரணை நடத்த வேண்டும் என 20 சதவீதம் பேரும்
அனைத்து கட்சி குழுக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என 7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராகுல் குற்றச்சாட்டு



அதானி நிறுவனம் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பா.ஜ., சாதகமாக உள்ளது என்ற ராகுலின் குற்றச்சாட்டு
உண்மை என 47 சதவீதம் பேரும்
இல்லை என 35 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

பெண் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட வீதம்
சிறப்பாக இருந்தது என 37 சதவீதம் பேரும்
மோசம் என 37 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவியேற்க பொருத்தமானவர் மோடியா அல்லது ராகுலா என்ற கேள்விக்கு
மோடிக்கு 52 சதவீதம் பேரும்
ராகுலுக்கு 16 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஊழலை மோடி அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என 54 சதவீதம் பேரும், இல்லை என 41 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அமைப்புகளை மற்ற அரசுகளை விட பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு ஆம் என 45 சதவீதம் பேரும் ,
இல்லை என 38 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

சிறந்த பிரதமர்



இதுவரை இந்தியாவின் சிறந்த பிரதமர்கள் யார் என்ற கேள்விக்கு
மோடி என 43 சதவீதம் பேரும்
இந்திரா என 15 சதவீதம் பேரும்
வாஜ்பாய் என 12 சதவீதம் பேரும்
மன்மோகன் சிங் என 11 சதவீதம் பேரும்
ஜவஹர்லால் நேரு என 6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமித்ஷா



மோடிக்கு மாற்றாக பா.ஜ.,வின் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என 29 சதவீதம் பேரும்
உ.பி., யோகி ஆதித்யநாத் என 26 சதவீதம் பேரும்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என 15 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

ஆதரவுக்கு காரணம்



பா.ஜ.,வை ஆதரிப்பதற்கான காரணம் என்ற கேள்விக்கு
பிரதமர் மோடி என 44 சதவீதம் பேரும்
வளர்ச்சி திட்டங்கள் என 22 சதவீதம் பேரும்
ஹிந்துத்வா என 14 சதவீதம் பேரும்
நலத்திட்டங்கள் என 8 சதவீதம் பேரும்
மேற்கண்ட விஷயங்கள் என 12 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் பிளவு காரணமாக பா.ஜ.,வுக்கு நன்மை பயக்கும் என 60 சதவீதம் பேரும்
இல்லை என 25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பா.ஜ.,வுக்கு தேர்தல் ரீதியாக உதவும் என 72 சதவீதம் பேரும்
இல்லை என 17 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்

லோக்சபா தேர்தலில் பாஜ., பலன் பெறுவதற்கான காரணங்களில்
இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம் என மோடியின் உத்தரவாதம் என 33 சதவீதம் பேரும்
ராமர் கோயில் கட்டுவது என 17 சதவீதம் பேரும்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என 12 சதவீதம் பேரும்
காஷ்மீர் சிறப்பு சட்டத்தை அமல்படுத்துவது என 8 சதவீதம் பேரும்
எதுவும் இல்லை என 20 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த இதழில் கூறப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து (21)

  • Bellie Nanja Gowder - Coimbatore,இந்தியா

    இந்தியா டுடே மற்றும் என் டி டிவி ஆகியவை பக்க காங்கிரஸ் சார்பு ஊடகங்கள். இவர்கள் எடுத்த சர்வே அவர்களின் வாசகர்களிடம் எடுத்த சுரவய் ஆகவே இருக்கும். அவர்களே இவ்வளவு சொல்லியிருக்கிறார்கள் என்றால் இதை விட அதிக இடங்களில் பி ஜெ பி வெல்லு என்றே எடுத்து கொள்ள வேண்டும்.

  • venugopal s -

    என் டி டி வி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளையும் வெளியிடலாமே!

  • sethusubramaniam - chennai,இந்தியா

    முதலில் இந்தியா டுடே நடுநிலை பத்திரிகையா , சார்பு பத்திரிகையா என்று கணிப்பு நடத்தி , அதன் பிறகு அவர்களுடைய கணிப்பை ஆராயலாம். வரிக்கு வரி பதில் சொல்ல முடியும் என்று நினைக்கும் கார்த்திக் அவர்கள் , தினமலர் தணிக்கை செய்துதான் வெளியிடும்

  • DVRR - Kolkata,இந்தியா

    Survey யை ஓரளவே நம்ப முடியும்???ஏனெனில் கேள்விகள் தரத்தை பொறுத்து இது மாறும். உதாரணம் : கேள்வி : நீங்களா மோடியா ராஹுலா .....யார் முட்டாள்கள் இதற்கு 1) நீங்கள் 2) மோடி 3) ராஹுல் 4) வேறொருவர் இதில் நீங்கள் ஒன்றில் tick செய்யவும் என்றால் எதில் செய்வீர்கள். ஆகவே கேள்வி என்ன விடை என்பதை பொறுத்து உங்கள் பதில் மாறுபடும். அதை வைத்து இவர்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். ஆகவே இதை முழுவதும் நம்ப முடியாது இல்லை சுத்தமாக நம்ப மாட்டேன் என்றால் அது அந்த நிறுவனத்தின் கொண்டுள்ள அவநம்பிக்கையை காட்டுகின்றது அவ்வளவே

  • Aarin - Andrapradesh,இந்தியா

    மோடி ஆட்சிக்கு வந்தபின் பிரிவினை வாதம் தலை விரித்து ஆடுகிறது. பி எம் கேர், நெடுஞ்சாலைத்துறை, ரபேல் வாங்கியது, கர்நாடகாவில் 40% கமிஷன், அம்பானி அதானிக்கு ஏழை மக்களின் வரியை இலவசமாக கோடி கோடியாக வாரி கொடுத்தது என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்