ADVERTISEMENT
பழனிக்கு வந்த கவர்னர் ரவியை வரவேற்க திரண்ட பா.ஜ.,வினரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். காரணம் கேட்டபோது, 'கருப்புக்கொடி காட்டத்தான் மேலிடம் அனுமதி தந்துள்ளது. வரவேற்பு அளிக்க அல்ல' என, டி.எஸ்.பி., கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கனகராஜ் கூறியதாவது: கவர்னர் ரவி, 24ம் தேதி பழனிக்கு குடும்பத்துடன் வருகிறார் என்ற தகவல் கிடைத்தது. அவருக்கு வரவேற்பு அளிக்க, பொதுமக்கள் திட்டமிட்டனர். அதேபோல, பா.ஜ., தரப்பிலும் கவர்னருக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
பழனி பஸ் நிலையம் அருகில் இருக்கும் மலர் ரவுண்டானாவில், கவர்னருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டது. இதையறிந்த, தி.மு.க., கூட்டணியினர், 30 பேர் அதே இடத்தில் ஒன்று கூடி, கருப்புக்கொடி காட்டினர்; கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து, பின் விடுவித்தனர்.
அவர்கள் கருப்புக் கொடி காட்டிய போது, கவர்னர் பழனிக்கு வரவில்லை. அதன்பின், அதே இடத்தில் பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள், 500 பேர் திரண்டனர். கையில் கவர்னரை வரவேற்கும் பதாகைகள் வைத்திருந்தனர்; வரவேற்பு கோஷம் எழுப்பப்பட்டது. அப்போதும், பழனிக்குகவர்னர் வரவில்லை.
பா.ஜ., நகர தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரை கைது செய்து, பழனி டி.எஸ்.பி., சரவணன், போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்.
'கவர்னரை வரவேற்பது தவறா?' என்று டி.எஸ்.பி.,யிடம் கேட்டேன்.
அதற்கு அவர், 'தமிழகம் முழுக்க கவர்னருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க தான், மேலிடத்தில் இருந்து போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளனர்; வரவேற்புக்கு அல்ல. அதனால் தான், வரவேற்பு அளித்த பா.ஜ.,வினரும், பொது மக்களும் கைது செய்யப்பட்டனர்' என, விளக்கம் அளித்தார்.
அத்துடன் என் கையை முறுக்கி, போலீஸ் வாகனத்தில் ஏறச் சொன்னார். மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்ட பா.ஜ.,வினர் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் என்ன நடந்ததோ தெரியாது. மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், எனக்கு போன் செய்து, 'நடந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (18)
சம்பத்தப்பட்ட அதிகாரிக்கு (?) மனநல ஆலோசனை உடனடியாக தேவை . வரவேற்க தடை?. இம்மாதிரி கூமுட்டையெல்லாம் அதிகாரி .
இப்படியும் ஒரு பிழைப்பா டிஏஸ்பி சார்
'கருப்புக்கொடி காட்டத்தான் மேலிடம் அனுமதி தந்துள்ளது. வரவேற்பு அளிக்க அல்ல' என, டி.எஸ்.பி., கூறியது,ஆகவே தமிழக போலீஸ் துறை பெயர் திருட்டு திராவிட மடியல் அரசு அடிமை துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது அவ்வளவு தானே
yaar intha mooda DSP thimuka kothadimai kirusthuvanaa muslimaa
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இது எப்படி இருக்குன்னா, நீங்க வாய்வழியே சாப்பிட மேல் இடம் அனுமதி கொடுக்கவில்லை. போங்கடா நீங்களும் உங்க ஏவல் துறையும், நல்லா இருக்கு உங்க நீதி..