மத்திய மின்சார சட்டத்தின் கீழ், தமிழக மின் வாரியம், 2010ல் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய, இரு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. தொடரமைப்பு கழகம், அதிக திறன் உடைய மின் கோபுர வழித்தடம் வாயிலாக மின்சாரத்தை, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்கிறது.மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அனல், நீர், எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை நிர்வகிப்பதுடன், மாநிலம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியையும் செய்கிறது. இரு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டாலும், இதுவரை அவை, ஒன்றாகவே செயல்படுகின்றன.
பல ஆண்டுகளாக, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம், உபகரணங்கள், நிலக்கரி போன்றவற்றை கொள்முதல் செய்தது உள்ளிட்ட காரணங்களால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியை சரிசெய்ய, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பரிந்துரை செய்யும் பணி, 'எர்னஸ்ட் அண்டு யங்' என்ற தனியார் நிறுவனத்திடம், 2021 அக்., மாதம் வழங்கப்பட்டது. அந்நிறுவனம் ஆய்வு செய்த விபரங்களை, சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், உற்பத்திக்கு தனி நிறுவனமும், மின் பகிர்மானத்திற்கு தனி நிறுவனமும், காற்றாலை மற்றும் சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்திற்கு, ஒரு நிறுவனம் என, மூன்று நிறுவனங்களை துவக்குமாறு, ஆலோசனை வழங்கியுள்ளது. இதுதொடர்பான கருத்துருவை அனுப்பி, தமிழக அரசிடம் அனுமதி கேட்க, மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
உற்பத்தி பிரிவு
மின் உற்பத்தி பிரிவை தனி நிறுவனமாக துவங்கும்பட்சத்தில், அதன் கடன் சுமை குறையும். இதனால், வங்கிகள், கடனுக்கான வட்டியை, 1 சதவீதம் குறைக்கும் பட்சத்தில், ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும். தற்போது, மின்தேவை குறையும்பட்சத்தில், அனல், நீர், எரிவாயு மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்படுகிறது. தனி நிறுவனமாக செயல்படும் பட்சத்தில் ஆண்டு முழுதும், முழு அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படும். அதில் உபரி மின்சாரம், தனியார், பிற மாநிலங்களுக்கு விற்று, வருவாய் ஈட்ட முடியும்.
பகிர்மானம் பிரிவு
மின்தடை ஏற்படாமல் சீராக மின் வினியோகம் செய்வதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், மின் பகிர்மான கழகத்தின் செயல்பாடு மேம்பட்டு, புதிதாக கடன் வாங்குவது தடுக்கப்படும். மின்சார விற்பனையில் அதிக கவனம் செலுத்தப்படும் என்பதால், அதற்கு ஏற்ப, மின் கட்டணம் வாயிலாக வருவாய் கிடைக்கும்.
பசுமை மின்சார பிரிவு
புதிதாக துவக்கப்பட உள்ள, பசுமை மின்சார நிறுவனத்திற்கு, ஒரு ரூபாய் கூட கிடையாது. இதனால், 'டெடா' எனப்படும் எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் மின் வாரியத்தின் பசுமை மின்சார பிரிவுகளை ஒருங்கிணைத்து, தனி நிறுவனம் துவக்கப்பட வாய்ப்புள்ளது. காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசும், வங்கிகளும் போட்டி போட்டு கடன் வழங்குகின்றன. அவற்றிடம் இருந்து கடன் வாங்கி, புதிய மின் நிலையம் அமைத்து,மின்சாரம் விற்று வருவாய் ஈட்டலாம்.
* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த கடன், 2022 மார்ச் நிலவரப்படி, 1.39 லட்சம் கோடி ரூபாய்; அதில் வங்கிகளில் வாங்கிய கடன், 11,765 கோடி ரூபாய்; நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன், 1.20 லட்சம் கோடி ரூபாய்; அரசிடம் வாங்கிய கடன், 4,582 கோடி ரூபாய்
* மொத்த கடனில், மின் உற்பத்தி பிரிவின் கடன், 30,000 கோடி ரூபாய் தான்
இருக்கும்
* மீதி அனைத்து கடனும் பகிர்மான பிரிவை சாரும்.
அ.தி.மு.க., ஆட்சியில், 2020 - 21 பட்ஜெட்டில், 'மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகத்தின் நிதி மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்த, விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், நிதி நிலை சீரமைப்புக்கு, தனியார் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டது. மத்திய அரசும், மின் வினியோகத்தில் போட்டி இருந்தால் தான் சேவை தரமாக இருக்கும் என்பதால், மின் பகிர்மான கழகத்தை பிரிக்குமாறு, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, நிதி நெருக்கடியை குறைக்க, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை பிரிப்பதற்கு, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் எதிர்க்க வாய்ப்பில்லை என, கருதப்படுகிறது. தனியாக பிரிப்பது என்பது, தனியாரிடம் ஒப்படைப்பது என்ற பொருள் அல்ல; தனித்தனி நிறுவனத்தை துவக்கி, தனியாக செயல்பட வைப்பதாகும். இதனால், தடையில்லாமல் மின் வினியோகம் செய்வது, செலவு குறைப்பு போன்றவற்றில் நிறுவனங்கள் இடையே போட்டி ஏற்பட்டு, சேவை தரம் மேம்படும்.
வாசகர் கருத்து (5)
Tq sir fir my thoughts to share in you and to all . particularly to inform the government.I hope to change the law's will be changed at very quickly.if don't done by government Again God will be seen every thing and...
அரசு நிர்வாகம் திறமையற்ற niravaagamaaga இருக்க காரணம் corruption.இவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தவறு செய்தால் மாட்டி கொண்டு விட்டால் அதிகபட்ச தண்டனை தற்காலிக பணியிடை நீக்கம்.இந்த தண்டனை மிக குறைவு.தான்.இதனை சரி செய்ய வேண்டும். தவற செய்து நிரூபிக்க பட்டால் நிறதந்ர பணி நீக்கம் செய்ய வேண்டும். அடுத்து இட ஒதுக்கீடுகள்.இனி இட ஒதுக்கீடுகள் என்பது தேவை யற்ற ஒன்று.அண்ணல் அம்பேதகரின் கனவு k என்றோ நிறைவேறி விட்டது.ஆம் இடஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று சொல்லும் மக்களுக்கு பொருளாதர அடிப்படையில் இடஒதுக்கீடு என்று தான் சொல்லி சட்டத்தில் எழுதி இருந்தார்.அதுவும் இல்லாமல் சுததிரம் பெற்று 70ஆண்டுகள் வரையே இந்த சட்டம் செல்லுபடியாகும் என்று சொல்லி இருந்தார். ஆனால் ஆண்ட அரசாங்கங்கள் தங்களின் பதவி ஆசை காரணமாக இந்த ஒரு சட்ட ஓட்டையை நிறைவேற்ற இல்லை. இதனால் எவ்வளவு தவறுகள் நடந்திருக்கின்றன?எத்தனையோ குடும்பங்கள் உயிரிகள் இருந்தும் நடை பிணமாக உள்ளனர்.இஅவர்கள் எல்லாம் பொருளாதரத்தில் என்றோ முன்னேறி விட்டனர். அமைச்சர் சேகர்பாபு அதற்கு ஒரு உதாரணம்.அதிகாரத்தில் இருந்தே அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எவ்வளவு வலி தெரியுமா? அதன் வலியை அனுபவித்த நபர்களுக்கு தான் தெரியும். எனவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று வழங்கும் அணைத்து சலுகைகளும ரத்து செய்யப்பட வேண்டும் பொருளாதர அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தான் சிறப்பு. PCR act என்பது தேவையில்லாத ஒரு த்ருபிடித்த ஆணி அதை இணும் பிடுங்காமல் இருப்பது ததான் எந்தனையோ குடும்பங்கள் மானத்தை இழந்து தவியாய் தவிக்கின்றன.. அணைத்து காரணங்களுக்கு ஆணிவேர் இந்த PCR thaan..எனவே முதலில் இதை இரத்து செய்ய வேண்டும். இன்னும் ஏராளமான ஓட்டைகள் உள்ளன இந்தியு அரசு சட்டத்தில்... என்னை பொறுத்தவரை இந்திய அரசியல் சட்டம் என்பது ஒரு துருப்பிடித்த மக்கி போன குப்பை. தண்டனைகள் அதிகமானால் தான் குற்றங்கள் குறையும். ஆனால் இந்திய அரசியல் சட்டம் avvaraaraa உபோது?..? இங்கே நீதி நியாயம் என்பது பணத்தாள் வாங்கப்படும் மற்றும் விற்கப்படும்.. அவ்வாறு இருக்க பிறகு ennaa பாரத் மாதாக்கி ஜெய் சொன்னாலும் பாரத மாதாவின் சேலை உருவபட்டு கொண்டே இருக்கும்....
அரசியல் தலைவர்கள் தலையீடு உள்ள வரை வாரியம் சுயமாக செயல்பாடு வராது அடுத்து சோலார் எனர்ஜி சிஸ்டம்ஸ் வீடுகளில் அமைப்பு மானியம் அளித்து ஊக்கம் அளிக்கவேண்டும் இதில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் அரசியல் சாயங்கள் உள்ளது அவர்கள் சம்பாதிக்க இதில் உள்ள வந்து நிர்வாகம் கேட்டு விடுகிறது
இதனால் பெரிய பயன் கிடைக்காது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்ய 5 IAS அதிகாரிகள். ஆனால் இங்கு ஒரு மட்டுமே. SE அதற்கு மேல் உள்ள பதவிகள் நிர்வாக வேலை மட்டுமே. (Non tech). மின் வாரியத்தில் 6பதவி உயர்வு மற்ற அரசு பணிகளில் 3மட்டுமே
மின் வாரிய முன்னேற்றத்திற்கு எத்தனையோ ஊழியர்கள் உண்மையுடன்,நேர்மையுடனும்,கடினமான உழைப்பை இப்போது உள்ள நவீன வசதிகள் இல்லாத காலத்திலும் தந்து ,பணி ஓய்வு பெற்று குறைந்த பென்ஷன் வாங்கி இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அதிக மின் இணைப்புகள்,மற்றும் மின் உற்பத்தி மற்றும் விநியோக முன்னேற்றத்திற்காக அவர்களுடைய கடின உழைப்பை கருத்தில் கொண்டு மின் வாரியம் தனியார் மயம் ஆகாமல் முன்னேற்றம் காண வேண்டும்.