Load Image
Advertisement

பொது பாடத்திட்டம் ரத்தாகும்: கவர்னர் அறிக்கையால் நம்பிக்கை

 Common Curriculum Abolition: Hope by Governors Statement   பொது பாடத்திட்டம் ரத்தாகும்: கவர்னர் அறிக்கையால் நம்பிக்கை
ADVERTISEMENT
சென்னை:: பொது பாடத்திட்ட விவகாரத்தில் பல்கலைகளுக்கு கவர்னர் எழுதிய கடிதத்தால் தமிழக அரசின் முடிவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதில் பல்கலைகளுக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள் மற்றும் அதன் இணைப்பு அந்தஸ்து பெற்ற கலை அறிவியல் கல்லுாரிகளில் தன்னாட்சி அந்தஸ்தின்படி தனித்தனி பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் தமிழக உயர் கல்வி மன்றம் கலை அறிவியல் படிப்புகளுக்கு திடீரென ஒரு பொது பாடத்திட்டத்தை தயாரித்து அதை அனைத்து பல்கலைகளும் கல்லுாரிகளும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

கடும் எதிர்ப்பு



இதற்கு கல்லுாரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சென்னை பல்கலை பேராசிரியர் பேரவை மக்கள் கல்வி கூட்டியக்கம் பல்கலை ஆசிரியர் சங்கம் ஆகிய தரப்பிலும் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் தன்னாட்சி கல்லுாரிகளின் முதல்வர்கள் தாளாளர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதுகுறித்து நமது நாளிதழில் விரிவான செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தன்னாட்சி கல்லுாரிகளின் கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் தன்னாட்சி கல்லுாரிகளுக்கு மட்டும் பொது பாடத்திட்டம் கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்தது.

கவர்னரிடம் முறையீடு



ஆனால் பல்கலைகளுக்கு பொது பாடத்திட்டம் பின்பற்றுவதில் விலக்கு அளிக்கவில்லை. இந்த விவகாரம் உயர் கல்வி துறையில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் பல்கலைகளின் வேந்தர் என்ற முறையில் கவர்னர் ரவியிடம் பொது பாடத்திட்ட பிரச்னையை கல்வியாளர்கள் மற்றும் தனியார் கல்லுாரி முதல்வர்கள் எடுத்து சென்றனர்.

அவர் இதுகுறித்து கவர்னர் அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் விவாதித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உயர் கல்வி கண்காணிப்பு அமைப்பான யு.ஜி.சி.யின் நிலைப்பாட்டைக் கேட்டு யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமாருக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதினார்.

யு.ஜி.சி. நிலைப்பாடு



இதையடுத்து கவர்னர் ரவியின் கடிதத்துக்கு யு.ஜி.சி. தலைவர் அளித்துள்ள பதில்: யு.ஜி.சி. விதிகளின்படி அகாடமிக் கவுன்சில் மற்றும் எக்ஸ்கியூட்டிவ் கவுன்சில் வழியாக பாடத்திட்டத்தை உருவாக்க பல்கலைகள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பல்கலையும் தன்னாட்சி கல்வி நிறுவனமும் தாங்களே விரிவான பாடத்திட்டத்தை உருவாக்க புதிய கல்வி கொள்கை வழியாகவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே பல்கலைகள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகள் தாங்களே பாடத்திட்டம் உருவாக்கி பின்பற்றுவதில் எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கவர்னர் கடிதம்



இவற்றையெல்லாம் குறிப்பிட்டு பல்கலைகள் தனியார் கல்லுாரிகள் தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கம் தமிழக உயர் கல்வி துறை ஆகியவற்றுக்கு கவர்னர் ரவி அனுப்பியுள்ள கடிதத்தில் 'உயர் கல்வி என்பது மத்திய அரசின் பொது பட்டியலில் உள்ளதாலும் யு.ஜி.சி.யின் விதிகள் தெளிவாக உள்ளதாலும் பொது பாடத்திட்டத்தை தன்னாட்சி கல்லுாரிகளோ பல்கலைகளோ பின்பற்ற வேண்டியதில்லை' எனக் கூறியுள்ளார்.

இதன் காரணமாக பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல்கலைகளின் வேந்தர் என்ற முறையில் கவர்னர் இதில் தலையிட்டுள்ளதால் பொது பாடத்திட்டம் முழுமையாக ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் பின்னடைவு



பொது பாடத்திட்டம், எதற்காக அவசரமாக உருவாக்கப்பட்டது, அதற்கான தேவை என்ன, உடனே அமல்படுத்துமாறு கட்டாயப்படுத்துவது ஏன் என்பதற்கான காரணங்களை, தமிழக அரசு விரிவாக விளக்கவில்லை.
பல்கலை மற்றும் கல்லுாரி பாடத்திட்டத்தை மேம்பாட்டுக்கு உதவவும், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு உறுதுணையாக செயல்படவும், தமிழக உயர் கல்வி மன்ற விதிகளில் அதிகாரம் தரப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, பொதுப் பாடத்திட்டத்தை, உயர் கல்வி மன்றம் உருவாக்கியது தவறு.

பொது பாடத்திட்டம் கொண்டு வருவது தொடர்பாக, தமிழக உயர் கல்வித் துறை எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை. பல்கலைகளின் கமிட்டிகள் மற்றும் யு.ஜி.சி., போன்ற அமைப்புகளின் கருத்துகளையும் பெறவில்லை. இதுபோன்ற விஷயங்களே பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (18)

  • Meenakshisundaram.m - Karur,இந்தியா

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க முடியாத துப்பு கெட்ட ஆட்சி...பெரியாரபற்றி படி,அண்ணாவ பற்றி படி...எதிர் கால வாழ்க்கைக்கு உதவாது...இவனுக கொள்கைய மாணவர்களிடம் துணிக்கவே இந்த ஏற்பாடு....

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    எல்லாவற்றிலும் அரசியல் செய்துகொண்டிருந்தால் நாடு எப்படி முன்னேறும்? எப்படி சாதிக்கும்? அரசியல்வியாதிகளே, நீங்களும் சரியாக படிக்க மாட்டீர்கள், வரும்கால இளம் 'தலைவர்களையும்' (மாணவர்களையும்) படிக்க விடமாட்டீர்கள். தயவுசெய்து, மாணவர்கள் படிப்பு விஷயத்தில் அனாவசியமாக உங்கள் மூக்கை நுழைத்து அரசியல் செய்யாதீர்கள். மாணவர்களை நிம்மதியாக படிக்கவிடுங்கள்.

  • Pandianpillai Pandi - chennai,இந்தியா

    வேந்தர் பதவி எந்த அரசால் வழங்கப்படுகிறது? வேந்தர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? முழுக்க முழுக்க அரசியல் செய்து ஆளுனர் மக்களை துன்பப்படுத்துகிறார். தமிழ்நாட்டு அரசின் தீர்மானங்களை மதிக்காமல் ஏதாவது காரணம் காட்டி தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது.

  • jayvee - chennai,இந்தியா

    மேடையில் அசிங்கமாக பேசுபவரை கல்வித்துறையில் நியமித்தால் இப்படித்தான் நடக்கும்

  • duruvasar - indraprastham,இந்தியா

    கழிவறையில் இருந்தபோது கணநேரத்தில் உருவான யோசனைப்போல் தெரிகிறது. செம்மண்செம்மலின் செறுக்கில் உதித்த திட்டமோ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement