மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் தலைமையில் தனியார் இடத்தை மக்களுக்கு இலவச பட்டாவாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது.
மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் (பழைய தேவி தியேட்டர் பின் பக்கம்) பூந்தோட்டம் என்ற பகுதியில் ஸ்ரீவியாச ராஜா மடத்திற்கு சொந்தமான இடம் உள்ளது.
இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு இலவச பட்டாவாக வழங்க சிலர் முயற்சி எடுத்தனர். இந்நிகழ்ச்சிக்கு எம்.பி., வெங்கடேசன் தலைமை ஏற்பதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட புகாரில் சம்பந்தப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டதால் எம்.பி., தலைமையில் நேற்று நடக்க இருந்த இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
பின்னணி என்ன
லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில் மக்கள் குறைதீர்க் கூட்டம் என்ற பெயரில் எம்.பி., வெங்கடேசன் மாநகராட்சி வார்டுகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூட தனது நிகழ்ச்சியில் கிடைத்த தீர்வாக வெளிக்காட்டிக்கொள்கிறார் என ஏற்கனவே சர்ச்சை எழுந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வியாச ராஜா மடத்திற்கு சொந்தமான தனியார் இடத்தை தேர்தல் ஆதாயத்திற்காக சட்டத்திற்கு முரணாக தானம் அளிக்க முயற்சி எடுத்துள்ளார்.
ஏற்கெனவே மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., மோகன் இருந்தபோதும் இதுபோன்ற முயற்சி எடுக்கப்பட்டது. அப்போதும் ஆவணங்கள், சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பட்டா வழங்கும் முயற்சி கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் வெங்கடேசன் அதை கையில் எடுத்து தோல்வியடைந்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீ வியாச ராஜா மடத்தின் பொறுப்பாளர் ராகவேந்திரன் கூறியதாவது: இப்பகுதியில் மடத்திற்கு சொந்தமாக 27 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது இலவச பட்டா வழங்க எம்.பி., முயற்சி செய்கிறார். எம்.பி.,க்கு அப்பகுதி மக்கள் சிலர் தவறான தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பட்டா வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
வாசகர் கருத்து (25)
தானம் செய்வதென்றால் தன்னோட சொத்தை, பொருளை, பணத்தை கொடுக்கவேண்டும்... ஊரான் வீட்டு சொத்தை ஆட்டையை போட்டு கொடுக்கக்கூடாது, அது சரி உங்களோட பிறப்பு அப்படி..... எண்ணத்தை சொல்ல.
அடுத்தவன் வீட்டு நெய்யே என் அண்ணன் பொண்டாட்டி கையே போல இருக்கிறது
அடுத்த முறை சீட்டு கிடைக்காது என்பது தெரிந்ததால் செய்கிறார். ஏற்கனவே கொஞ்சநாள் முன்பு சூர்யா குடும்பத்தினருக்கு டூரிஸ்ட் கைட் வேலைசெய்து எதிர்கால பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு விட்டார். பிழைக்க தெரிந்த பொதுவுடமைவாதி.
இவேனல்லேம் ஒரு MP
''பன்றியொடு சேர்ந்தால் கன்றும் மலம் தின்னும் '' வர வர கம்யூனிஸ்டுகளுக்கு மானம், ரோஷம், வெட்கம், நியாயம் எல்லாம் இல்லாமே போச்சு.