"திருச்சியின் வளர்ச்சிக்கு கிறிஸ்துவர்களே காரணம்": அமைச்சர் நேருவின் பேச்சால் சர்ச்சை

விழாவில் அமைச்சர் நேரு பேசியதாவது:
திருச்சிக்கு பல பெருமை உண்டு. திருச்சியில் 180 ஆண்டுகளுக்கு முன்பாக கல்லூரியை துவங்கி, அதன் அருகிலேயே பெண்கள் கல்லூரியையும், மருத்துவ சேவைக்காக அமெரிக்கன் மருத்துவமனையையும் துவங்கி, நூறாண்டுகளுக்கு மேலாக மக்களுக்காக, கிறிஸ்தவ சமுதாயம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
திருச்சியின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமுதாய மக்கள் தான் முக்கிய அங்கமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறைந்த செலவில் கல்வி சேவை அளித்து வரும் ஹோலி கிராஸ் கல்லூரி நிர்வாகம் மேலும் 100 ஆண்டுகள் சிறந்த சேவையாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குறிப்பாக, திருச்சியின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமுதாய மக்கள் தான் முக்கிய அங்கமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர் என அமைச்சர் கே.என்.நேரு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வாசகர் கருத்து (67)
யோவ் நீயெல்லாம் ஒரு மந்திரியா? ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வந்தால் வந்த இடத்தில் எதற்காக வந்தமோ அதை மட்டும் பேசிட்டு போவியா, அதைவிட்டுட்டு அங்கும் மத அரசியலை பேசறயே உனக்கே கேவலமா இல்லை.
ஹிந்து துரோகி பச்சோந்தி. இவனெல்லாம் சுரங்கநாதர் கோயிலுக்குள் அனுமதிப்பது தவறு. இந்த தறுதலை சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
ஆம்...... ஊழலின் ஊற்றுக்கண் திமுக நேரு திருச்சிதான் என்பது பெருமைதான்
ரங்கநாதர் இவனோட கண்ணுக்கு தெரியல, நல்லா ஆடு கடவுளோட ஆட்டத்தை பார்க்க தானே போறே, சொந்த தம்பிய காப்பாற்ற வக்கில்லாதவன்
Kartharin Seedar Vidiyal Vaazhga...@.