Load Image
Advertisement

மாவட்டத்திற்கு ஒரு நினைவு சின்னம்!

 A monument to the district!    மாவட்டத்திற்கு ஒரு நினைவு சின்னம்!
ADVERTISEMENT
சென்னை ;'கருணாநிதி நுாற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில், அவர் கூறியுள்ளதாவது: கருணாநிதி நுாற்றாண்டு விழா தொடர்பாக, மாநில அளவில், 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 12 மாவட்டங்களில், மாநில அளவிலான கொண்டாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.


இந்நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட வேண்டும். மேலும், மாவட்டத்திற்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.

கோவையில் கருணாநிதி செம்மொழி பூங்காவுக்கும், சென்னையில் கருணாநிதி பன்னாட்டு அரங்கத்திற்கும், விரைவில் அடிக்கல் நாட்ட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நாட்டிற்கு அவர் எப்படி புகழ் சேர்த்தார் என்பது குறித்து, அனைவரும் பயன்படுத்தும் வகையில், கருணாநிதி குறித்த 100 பக்க வரலாறு வெளியிட்டு, இலவசமாக பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.இன்றைய இளைய தலைமுறையிடம், கருணாநிதியின் ஆளுமையை வெளிப்படுத்துவதே, இதன் நோக்கமாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (59)

  • நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா

    மனைவி, துணைவி மற்றும் இணைவி இவிங்களையும் சேர்த்தா நல்லாயிருக்கும்

  • Visu - chennai,இந்தியா

    மனைவி துணைவி இணைவி என்று அவர் வாழ்ந்த பண்பாட்டையே அனைவரும் பின்பற்றவேண்டும்

  • raja - Cotonou,பெனின்

    ரெண்டு அம்மாவுக்கும் செய்த புகளும் இருக்குமா...

  • Dharmavaan - Chennai,இந்தியா

    yaar appan veettu sothil kollaikaarran கட்டுமரத்துக்கு விளம்பரம்.பாரத ,மாத சிலை patta nilathil koodaathu aanaal kollaikaaranukku மாவட்டம் தோறும் தேவையா

  • Dharmavaan - Chennai,இந்தியா

    yaar

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement