ராஜ்யசபா எம்.பியாக, ஜெய்சங்கர் உள்ளிட்ட 9 பேர் பதவியேற்பு
புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஓ பிரையன் உள்ளிட்ட 9 பேர் இன்று(ஆகஸ்ட் 21) பதவியேற்றனர். ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் ராஜ்யசபா எம்.பி.,யாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் 2வது முறையாக ஜெய்சங்கர் ராஜ்யசபா எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார். மேலும், பாபுபாய் ஜெசங்பாய் தேசாய் (குஜராத்), கேஸ்ரீதேவ்சிங் திக்விஜய் சங் ஜாலா (குஜராத்), நாகேந்த்ரா ராய் (மேற்கு வங்காளம்) ஆகியோர் பா.ஜ., ராஜ்யசபா எம்.பியாக., பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிக் பராய்க், சமிருல் இஸ்லாம் ஆகிய 5 பேரும் ராஜ்யசபா எம்.பி.யாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜ., வுக்கு நன்றி
இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை: ராஜ்யசபா எம்.பியாக நான் பதவியேற்பதில் ஆழ்ந்த பெருமையடைகிறேன். தேச மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வாய்ப்பளித்த குஜராத் மக்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜ.,வுக்கு நன்றி. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
தேசியவாத பாஜகவின் ஆட்சியில் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் போன்ற திறமையான ஊழல் லஞ்ச புகார் இல்லாத ஆட்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கிறது. ஆனால் திமுகவில் லியோனி போன்ற ஆட்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கிறது. அதுவும் கல்வித்துறையில். இதுவல்லவோ பெரியார் மண்ணு, திராவிட பண்ணு. விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.
வாழ்த்துகள் ஜெய்சங்கர் ஐயா.
திரு ஜெய்ஷ்ங்கர் மிகுந்த திறமைசாலி, புத்திகூர்மையானவர், சிறந்த சமயோஜிதபுத்தி கொண்டவர் மற்றும் தற்சமயம் வகித்துவரும் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். அவர் இதே பதவியில் தொடர்ந்து பணியாற்றி நமது தேசத்திற்கு பெருமைசேர்க்க வாழ்த்துக்கள்.
இந்தியாவின் சிறந்த ராஜ தந்திரி திரு.ஜெய் ஷங்கர் அவர்கள், மேலும் மேலும் அவரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.மிஸ்டர் வைட் என்றால் அது இவர்தான், வெளியுறவு கொள்கையில் வல்லவர்.
ஜெய்சங்கர் ,அஸ்வனி , கட்கரி , பியூஸ் கோயல் போன்றவர்கள் மோடி அமைச்சரவையின் வைரங்கள்