Load Image
Advertisement

சந்திரயான் 2 மற்றும் 3 இடையே தகவல் தொடர்பு: இஸ்ரோ கொடுத்த "குட் நியூஸ்"


பெங்களூரு: சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சந்திரயான்-2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது என இஸ்ரோ கூறியுள்ளது.
Latest Tamil News

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்- 2 கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 2 வெற்றிகரமாக நுழைந்தது.

திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திரயான்-2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது.

நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலத்தை ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது. நிலவில் இருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 134 கி.மீ., சுற்று வட்டப் பாதைக்குள் லேண்டர் சாதனம் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நாளை மறுதினம் ( ஆக-23) மாலை 6:04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து, இஸ்ரோ மேலும் கூறியிருப்பதாவது: ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான்-2 ஆர்பிட்டருடன் சந்திரயான்-3 லேண்டர் தகவல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது. விக்ரம் லேண்டர் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலமாகவும் கிடைக்கும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Latest Tamil News

சந்திரயான் பிடித்த புதிய நிலவு படங்கள்





நாளை மறுநாள் நிலவில் தரையிறங்க உள்ள, சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவு தொடர்பான புதிய படங்களை அனுப்பி உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த படங்கள் நிலை தரையிறக்கும் சரியான பகுதியை விஞ்ஞானிகள் முடிவு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். இன்றைய 4 படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.



வாசகர் கருத்து (7)

  • jagan - Chennai,இலங்கை

    அமெரிக்க காரன் நிலவுக்கு போனபோது ஒரு மத்திய கிழக்கு கேஸ் போட்டது, நிலவு/பிறை எங்கள் சொத்து எவனும் அங்க போக கூடாது என்று, இப்பவும் வரவானுகளோ ? ஹா ஹா ஹா

  • Tamilselvan,kangeyam638701 -

    சந்திரயானை நாம் ஏவியதில் இருந்தே அமைதிமார்க்க மூர்க்கன்கள் அதாவது இந்துப் பெயரில் ஒளிந்து கொண்டு மதுரை,தஞ்சை, போன்ற ஊர் பெயர்களில் கருத்தை போடும் எவனாச்சும் ஒருவனாவது இந்த இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்திற்கு வாழ்த்து சொல்லியிருக்கானுகளானு பாருங்கள் வாசகர்களே இதிலிருந்தே இவன்களின் எண்ணம் என்னவென்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

  • Sudhaker Mani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஜைஹிந்த், மனமார்ந்த வாழ்த்துக்கள் இஸ்ரோ.

  • raja - Cotonou,பெனின்

    ,👏👏👏🎈👍👌

  • R Ravikumar - chennai ,இந்தியா

    ஜெய்ஹிந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்