Load Image
Advertisement

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்: காரணங்களை அடுக்குகிறார் பாதுகாப்பு துறை அதிகாரி

 Kachchadiwe should be recovered from Sri Lanka: Defense official lays out the reasons    இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்:  காரணங்களை அடுக்குகிறார் பாதுகாப்பு துறை அதிகாரி
ADVERTISEMENT
'கச்சத்தீவை மீட்க வேண்டும்' என்ற குரல், தமிழகம் மற்றும் டில்லி அரசியல் வட்டாரங்களில் எழுந்து, அது தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதன் பின்னணியில், அரசியல் காரணங்கள் இருந்தாலும், 'உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு கருதி, கச்சத்தீவை திரும்பப் பெறுவது மிகவும் முக்கியம்' என, பாதுகாப்பு துறை அதிகாரிகளும், இந்திய பெருங்கடல் பகுதியின் அரசியல் குறித்து ஆய்வு செய்யும் அறிஞர்களும் கூறுகின்றனர்.

வரையறையில் மாற்றம்

இதுதொடர்பாக, பாதுகாப்பு துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவு, 285 ஏக்கர் பரப்பளவு உடையது. ௧974 வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவை, அப்போதைய பிரதமர் இந்திரா, நல்லெண்ண அடிப்படையில், ஒப்பந்தம் ஒன்றின் வாயிலாக, 1974 ஜூலை, 8ல் இலங்கையிடம் ஒப்படைத்தார்.

அந்த ஒப்பந்தத்தில், அப்போதைய இலங்கை அதிபரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும், பிரதமராக இருந்த இந்திராவும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில், 1976ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, மன்னார் வளைகுடா பகுதியில், இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று கூறப்பட்டது.

இது, தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் தொந்தரவு தர வழி வகுத்தது.

எனவே, கச்சதீவு ஒப்பந்த வரையறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்தது.

அது, முடியாது என்றான நிலையில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, அரசியல் ரீதியாக குரல் எழுப்பப்படுகிறது. ஆனால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில், மீனவர்கள் பிரச்னையை காட்டிலும், வேறு பல காரணங்கள் உள்ளன.

அச்சுறுத்தும் சீனா

சில தினங்களுக்கு முன், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வில்லியம் மற்றும் மேரி கல்லுாரியின், 'எய்டு-டேட்டா' ஆய்வுக்கூடம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், 'இலங்கை ஹம்பந்தோட்டாவில் உள்ள துறைமுகத்தை, தன்னுடைய கடற்படை தளமாக்கும் வேலையில், சீன அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பணியை இரண்டு ஆண்டுகளில் முடித்து விடும்' என்று கூறப்பட்டுள்ளது.

ஹம்பந்தோட்டாவில், சீனா பணியை வேகமாக முடித்து விட்டால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.

இந்தியாவிற்கு மிக நெருக்கத்தில் இருக்கும் இலங்கையில், சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது கவலைக்குரியது.

ராஜதந்திர அடிப்படையில் நோக்கினால், உள்நாட்டு பாதுகாப்பில் மட்டுமின்றி, தேசிய எல்லை பாதுகாப்பிலும், இந்தியாவுக்கு சீனாவால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது, இந்திய பெருங்கடல் பகுதியில் சரியானதல்ல.

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, தென்பகுதியில் வலுவாக காலுான்றிய சீனா, தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலுான்ற முற்படுகிறது.

இலங்கையின் வட பகுதியில், 'கடலட்டைப் பண்ணைகள்' என்ற பெயரில், சீனா பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள், வரலாற்று ரீதியாகவும், இன உணர்வு அடிப்படையிலும், இந்தியாவுடன் குறிப்பாக தமிழகத்துடன் நெருக்கமாக உள்ளனர்.

ஆனால், அந்த மாகாணத்தவருக்குள், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரிவினை ஏற்படுத்தும் வேலையில், சீனா ஈடுபட்டு வருகிறது.

மீளாய்வு

கொழும்புவில் தாமரை கோபுரம், 2019ல் திறக்கப்பட்டது. அப்போது, அக்கோபுரத்தை வடிவமைத்த சீனாவின் தேசிய மின்னணுவியல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம், பல திசைகளிலும் உளவு பார்க்கும் சாதனங்களை, அந்த கோபுர கட்டமைப்பில் ஏற்படுத்தி உள்ளது.

இதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவும் பல ஆண்டுகளாகவே திரிகோணமலையில், ஒரு ராணுவ பாதுகாப்பு தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயும், 'இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்ய, ராணுவ மேஜர் ஜெனரல் சன்ன குணதிலகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்துள்ளார். அது, இலங்கை- - இந்திய பாதுகாப்பில் உற்று நோக்கத்தக்கது.

தலையாய கடமை

இந்நிலையில், பூகோள -அரசியல் நிகழ்வுகளையும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு வரப்போகும் ஆபத்துகளையும் ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டிய நிலையில், இந்திய அரசு உள்ளது.

தற்போது, விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கிழக்கு கப்பல்படை தளம் தான், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இந்நிலையில், கச்சத்தீவை மீட்டு, அங்கும் இந்திய படைத்தளம் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், சீனாவால், இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், இந்தியாவை பாதிக்காமல் இருக்கும். அத்துடன், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.

அரசியல் காரணங்களை கடந்து, இந்திய எல்லைப் பாதுகாப்புக்காகவும் கச்சத்தீவை மீட்பது இந்தியாவின் தலையாய கடமையாகும்.


இவ்வாறு அவர் கூறினார்


-- நமது நிருபர் -.


வாசகர் கருத்து (9)

  • வேங்கையன் - தமிழர் நாடு,இந்தியா

    இந்தியா என்ற தந்தையர் நாடு ஈழத்தமிழருக்கு செய்த துரோகத்தால் இன்று எல்லை பாதுகாப்பு இன்றி பரிதவிக்கிறது அப்போது பிரபாகரன் முல்லைத்தீவில் இருக்கும் வரைக்கும் ஒரு நாய் கூட இந்திய பெருங்கடலில் நுழைந்ததில்லை இன்றோ அமெரிக்கா சீனா என்ற எனப்பிறவிகள் உள்ளே நுழைந்து ஆட்டம் காட்டுகிறார்கள் காரணம் இந்தியா ஒன்றிய அரசே பட்டாலும் திருந்த மாட்டானுங்க இந்த ஆரிய கைக்கூலிகல். இவர்களே பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற வதந்தியை கிளப்பி சீனா விற்கு பயம் காட்டுகிறார்கள்.

  • CBE CTZN - Coimbatore,இந்தியா

    எதற்காக கொடுக்கணும், இப்ப இத வச்சு அரசியல் பண்ணத்தான் கொடுத்திருக்கிறார்கள்..

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    கச்ச தீவை மீட்பது அவ்வளவு சுலபமானது இல்லை. நேரு இந்திரா காலத்தில் போடப்பட்ட பல கடினமான முடிச்சுகளை அவிழ்ப்பது மிகவும் சிரமம். மோடியின் மனதில் என்ன ஓடுகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    கண்டிப்பாக மீட்கணும், மீட்கப்படும். அவர்களே அதை குடுத்து பாதுகாப்பும் வேற ஒரு சில உதவிகள் கேட்பார்கள் நம்மிடம் கூடிய விரைவில்,

  • வேங்கையன் - தமிழர் நாடு,இந்தியா

    இதை தான்யா பல வருடங்களாக தமிழ்த்தேசிய அமைப்புகள் போராடி வருகின்றன குறிப்பாக நாம் தமிழர் கட்சி இதை செய்வதற்கு எந்த ஒன்றிய அரசிற்கும் துணிவு திராணி தெம்பு எதுவும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே ஒன்றிய அரசுகள் கவலைப்படாது காரணம் சீனா இலங்கையில் இருந்து தாக்குமானால் முதலில் அழியப்போவது தமிழகமே ஆகவே அவர்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை அதாவது தமிழன் எங்கு(கடல், நிலம், வான்) அழிந்தாலும் தமிழன் தமிழனே இந்த அதிகாரவர்க்கம் ஒரு போதும் தமிழர் நிலம் மக்கள் பற்றி கவலைப்படாது தமிழக மக்களுக்கு இன்றைய தேவை ஒரு தமிழ் தேசிய அரசியல் மற்றும் ஆட்சி இது வராமல் இந்த கோரிக்கைகல் நிறைவேறாது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்