Load Image
Advertisement

உண்ணாவிரதத்தில் யாரும் எதையும் சாப்பிடக் கூடாது

 No one should eat anything while fasting    உண்ணாவிரதத்தில் யாரும்  எதையும் சாப்பிடக் கூடாது
ADVERTISEMENT


சென்னை : 'நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுதும் தி.மு.க., நடத்த உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் கண்ணியத்தை காக்க வேண்டும்' என, கட்சியினருக்கு, அமைச்சர் உதயநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தி.மு.க.,வின் மருத்துவர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி ஆகியவை இணைந்து, 'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகம் முழுதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றன.

இது தொடர்பாக, மூன்று அணியினரையும் இணைத்து, 'ஜூம்' செயலி வாயிலாக ஆலோசனை நடத்திய உதயநிதி, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது:

உண்ணாவிரத போராட்டத்தில் கட்சியின் பிற அணியினரையும் சேர்த்து கொள்ளலாம். மாலை 5:00 மணி வரை போராட்டத்தில் இருக்க வேண்டும். போராட்டத்தின்போது, யாரும் எதையும் சாப்பிடக் கூடாது.எல்லாரிடமும் மொபைல் போன் என்ற ஆயுதம் உள்ளது. அனைவரும் இதை மனதில் கொள்ள வேண்டும். போராட்டத்தின் இடையே யாரும் எழுந்து சென்று, சாப்பிட்டு விட்டு திரும்பினால், அது உடனே சமூக வலைதளங்களில் எதிரொலிக்கும் என, கட்சியினரை உதயநிதி அறிவுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


வாசகர் கருத்து (12)

  • David DS - kayathar,இந்தியா

    இந்த விதிமுறைகள் எல்லாம் இவங்க தாத்தாவுக்கே தெரியாது.

  • madhavan rajan - trichy,இந்தியா

    இவர் போராட்டம் புல்லரிக்க வைக்கிறது. இதேபோன்று மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றையும் எதிர்த்து இவர் போராட்டம் நடத்தினால் சிறப்பாக இருக்கும். எப்படியும் நடக்க போவது இல்லை. மக்களுக்காக போராடுகிறேன் என்று சீன் போட உதவும். இல்லையென்றால் இவர் மக்களுக்கு உதவா நிதி என்று அன்போடு அழைக்கப்படுவார்.

  • madhavan rajan - trichy,இந்தியா

    இன்னும் பல அறிவுரைகள் இருக்கிறது ஆனால் நிறைவேற்ற முடியாது. அரசியல்வாதிகள் பொய் பேசக்கூடாது. திமுக காரன் நேர்மையாய் நடக்கணும். கான்டராக்டில் கமிஷன் வாங்கக்கூடாது. மக்களுக்கு மந்திரிகள் இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது. பிள்ளைகளை மந்திரியின் வருகைக்காக வெயிலில் காத்திருக்க வைக்கக்கூடாது. தான் ஆதரித்து கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தானே போராடக்கூடாது. இன்னும் பல பல.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Biriyani and Tasmac Addicts are alarmingly on the rise in Tamil Nadu.....

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஹா ஹா.. பய புள்ளைக பிரியாணி அண்டாவை பாத்துட்டா வாய பொளந்துரானுவன்னு சிருசுக்கு தெரியும்ல அதான்.. உண்ணாவிரதத்துல சாப்புடபுடாதுன்னு அறிவுரை சொல்ற கட்சி.. அதுக்கு ஒரு தொலைவர்.. என்ன இது ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement