Load Image
Advertisement

இனி எல்லாமே அண்ணாமலை தான்: போலீஸ்காரர் ராஜினாமா அறிவிப்பு

Now everything is Annamalai: Policeman resigns   இனி எல்லாமே அண்ணாமலை தான்: போலீஸ்காரர் ராஜினாமா அறிவிப்பு
ADVERTISEMENT
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் அரசியல் பயணத்தால் கவரப்பட்ட, காவலர் ஒருவர் தன் பணியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் கார்த்திக். இவர், நேற்று முன்தினம், சமூக வலைதளத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், ' நாடு சுதந்திரம் பெற்று, 77 ஆண்டுகள் ஆகிறது. எனினும், இந்த சமூகத்தில் சுதந்திரம் இருக்கிறதா? அதுபற்றி ஆராய்ச்சி செய்யப்போகிறேன். அதற்காக என் உயிர் மூச்சாக கருதும் காவலர் பணியை ராஜினாமா செய்கிறேன்' என, கூறியுள்ளார்.

இதற்கு காவலர்களிடம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சமூகத்தில் சுதந்திரம் இல்லை என்பதற்காக, அரசு பணியை துறக்கலாமா, அதற்கு இது தீர்வாகுமா என, கேள்விகளும் எழுந்தன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கார்த்திக் கூறியதாவது: சமூகத்தில் சுதந்திரம் இல்லை என்பதால் என் பணியை ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றம் இல்லை. ராஜினாமா கடிதத்தை, ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்துள்ளேன். பரிசீலனையில் உள்ளது.

தமிழகத்தில், பூரண சுதந்திரத்திற்கான மாற்றம், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையால் தான் நிகழும். அவர் தான் அடுத்த முதல்வர். அவரது அரசியல் பயணத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த முடிவை எடுத்துள்ளேன். அவரும் காவல் பணியில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அவரை பின்பற்றுவதை பெருமையாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, பணிக்கு வராமல் அரசு பணியாளர் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக பேட்டி அளித்துள்ள கார்த்திக் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல், டி.எஸ்.பி., ராஜா, எஸ்.பி., தங்கதுரைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


வாசகர் கருத்து (18)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    சேற்றில் ஒரு செந்தாமரை. காவல் துறையில் ஒரு உத்தமன்

  • Godyes - Chennai,இந்தியா

    அண்ணாமலை திராவிடன் எங்கே என்று கேட்பதை மக்கள் வரவேற்கிறார்கள்.

  • MP.K - Tamil Nadu,இந்தியா

    நல்லது இன்னும் நிறைய பேரை எதிர்பார்க்கிறோம் ராஜினாமா செய்யுங்கள் ஏன் என்றால் எனக்கு தெரிந்து சிலர் அரசு பணியில் இருந்து கொண்டு பிஜேபி அண்ணாமலைக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பேசிவருகின்றனர் அவர்களும் வெளியேறி விடுவது நல்லது

  • MP.K - Tamil Nadu,இந்தியா

    innum

  • kannan - Bangalore,இந்தியா

    பிஜேபி க்கு ஓட்டுப் போடாமல் அமெரிக்காவில் வேலை செய்பவர்கள் இவரைப் பார்த்து நடக்கவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement