ADVERTISEMENT
புதுடில்லி: ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ள படம் ‛ஜெயிலர்'. இந்த படத்தில் அனிருத் இசையில் தமன்னா ஆடிய ‛காவாலா' பாடல், படம் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க டிரெண்டிங்கில் இடம் பிடித்த இந்த பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரீல் வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானின் பிரபல யூ டியூபர் பெண்ணுடன் இணைந்து அவர் நடனமாடி உள்ளார். ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி, "ரஜினி காந்த் மீதான எனது அன்பு தொடரும்" சமுக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (10)
ரஜினிகாந்த் என்ன சொல்வார் ! பணம் நிம்மதியை தராது. ஆனால் சினிமா சந்தோசத்தை தரும். ஆகவே, மக்கள் பணத்தை வாரி இறைத்து சினிமா பார்க்க வேண்டும். அதனால், நான் கோடிகளில் புரள்வேன். ஆனாலும், பணம் மனிதனுக்கு வாழ்க்கையில் நிம்மதி தராது......!!! மக்களே புரிந்து கொள்ளுங்கள் !!!!!! ☺️☺️
யாரையும் தமிழகம்.கெடுத்து விடும்... ஆண்டவனாகட்டும்.மாற்றிவிடும்..
இது பெருமையா? சினிமா மோகத்தில் விழுந்த உயர் அதிகாரி என்ற சிறுமையா...?வளர்ச்சி பணிகளில் தான் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.. அவர்களின் தனிப்பட்ட ஆசா பாசங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.. இப்படி சமூக திறந்த வெளியில் இல்லை.. மற்றவர்களுக்கு இன்ஸ்பிரஷன்/ரோல் மாடல் போல இருக்க வேண்டுமே தவிர இப்படி கூத்தாடியா அல்ல
சீன அதிபரை இதுபோல 'ஆட்ட'வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இரஜினிக்கு ஜப்பானில் பல லட்சம் இரசிகர்கள் உண்டு. எனது நண்பர்கள் டிவிடி வாங்கி அனுப்பச்சொல்லுவார்கள், சிலர் தமிழகம் வந்து படம் இரண்டு இரஜினி படமாவது பார்க்காமல் போக மாட்டார்கள்.