ADVERTISEMENT
லண்டன்: நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் லண்டனில் உள்ள பிரபல இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் இந்திய தேசிய கீதத்தை புதுமையான வடிவில் இசைத்துள்ளார். இதனை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
லண்டனின் உள்ள அபே ரோட் ஸ்டுடியோவில் மூன்று முறை 'கிராமி விருது' பெற்ற இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜு, பிரபலமான ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் 100 இசைக்கலைஞர்களை கொண்டு இந்திய தேசிய கீதத்தின் புதுமையாக இசைத்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை வெளியிட்ட ரிக்கி கேஜ், '100 இசைக்கலைஞர்களுடன் பதிவு செய்த இந்த தேசிய கீதத்தின் முடிவில் 'ஜெய ஹே' என்னும் சொல், மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிவை சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் அளிக்கிறேன்.

நமது தேசிய கீதத்தின் இந்த பதிப்பு தேசத்திற்கு எனது பரிசு. நிகழ்வுகள், தொலைக்காட்சி, வானொலி, பள்ளிகள், கல்லூரிகள், சமூக ஊடகங்கள், யூடியூப். ராயல்டி, பணம், கட்டணம் அல்லது பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.
நமது தேசிய கீதத்திற்குத் தகுதியான மரியாதை மற்றும் கண்ணியத்துடன் அதைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேசிய கீதத்தின் இந்த பதிப்பு உங்களுக்கு சொந்தமானது.' எனத் தெரிவித்தார்.
இதற்கு பிரதமர் மோடி, 'அற்புதம். இது நிச்சயமாக ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும்' என பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த இசை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வாசகர் கருத்து (5)
அருமை.நன்றி Jai Hindh 🙏🏽🇮🇳🇮🇳🇮🇳
உங்களுக்கும் எங்களது மனம்கனிந்த சுதந்திரதின வாழ்த்துகள்
மிக மிக அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அருமை. நன்றி 🙏🇮🇳
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அருமை