Load Image
Advertisement

ஜெயிலர் படத்தில் நெல்சன் கையாண்டிருக்கும் டார்க் காமெடியின் வரலாறு..!

The history of Nelsons dark comedy in Jailer..!   ஜெயிலர் படத்தில் நெல்சன் கையாண்டிருக்கும் டார்க் காமெடியின் வரலாறு..!
ADVERTISEMENT
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் முன்னதாக வெளியான ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. விஜய்க்கு இணையாக ரஜினி படம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகம் ஓடியுள்ளது. இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடித்துள்ள ரஜினி, முதல் பாதியில் அமைதியான குடும்பத் தலைவராகவும் இரண்டாம் பாதியில் மோகன்லால், சிவராஜ்குமாருடன் இணைந்து அதிரடி மன்னனாகவும் நடித்துள்ளார்.

நெல்சனின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் அவரது வழக்கமான டார்க் ஹியூமர் எனக் கூறப்படும் சீரியஸான காட்சியினிடையே புகுத்தப்பட்ட நகைச்சுவை இப்படத்திலும் அதிகமாக இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. டார்க் ஹியூமர் அல்லது பிளாக் காமெடி என அழைக்கப்படும் நகைச்சுவை ரகத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.
Latest Tamil News
பண்டைய கிரேக்க இலக்கியக் கதைகளே பிளாக் காமெடி ஜானராவின் ஆரம்பப் புள்ளியாகக் கருதப்படுகிறது. வித்யாசமான கற்பனை மற்றும் எண்ணங்கள் கொண்ட நாவலாசிரியர்கள் தங்கள் கதையில் கொடூரமான நிகழ்வொன்று நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதனை காமெடி காட்சிபோல சித்தரித்து எழுதினர். சிறார் பாலியல் வன்கொடுமை, ஒரு தாய்க்குப் பிறந்த குழந்தைகளிடையே உள்ள கள்ள உறவு, ஓரினச்சேர்க்கை, பெண்களுக்கு எதிரான வன்முறை, ரத்த வன்முறை, வறுமை, அடிமைத்தனம், தற்கொலை, கொலை, கருச்சிதைப்பு, பயங்கரவாதம், போர், இனப்பாகுபாடு, பெண் அடிமைத்தனம் உள்ளிட்டவை பற்றி நாவல் எழுதும் கதாசிரியர்கள் இதன் நடுவே காமெடி கலந்து எழுதினர்.

இது அந்த எழுத்தாளர்களது வக்கிர புத்தியைக் காட்டுவதாக 18 ஆம் நூற்றாண்டில் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன. இதே பாணியை உலக சினிமாக்களும் தங்கள் படைப்புகளில் காட்சிபடுத்தின. இதனை கேலோஸ் ஹியூமர் என அப்போது அழைத்தனர். பின்னாட்களில் டார்க் காமெடி என அழைக்கப்பட்டது.
Latest Tamil News
ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமாரின் அடியாள் ஒருவர் தவறு செய்ததற்கு தண்டனையாக அவரை சீலிங் ஃபேனில் தலைகீழாகத் தொங்கவிட்டு ஃபேனை வேகமாக சுழலவிடும் காட்சி இடம்பெறும். ஃபேனில் தலைகீழாகத் தொங்கும் அந்த அடியாள், தொங்கிய நிலையிலேயே வேகமாகச் சுழலுவார். இதுபோன்று ஒரு மனிதரை சித்ரவதை செய்துகொண்டிருக்கும் காட்சியில் ரஜினி, சிவராஜ்குமார் ஆகியோர் சாவகாசமாக நாற்காலியில் எதிரெதிரே அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்பர். இந்தக் காட்சியை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் சிரித்து மகிழ்கின்றனர். இதுவே நெல்சனின் டார்க் ஹியூமர் பாணி. இதேபோல படம் முழுக்க டார்க் ஹியூமர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுபோன்ற டார்க் ஹியூமருக்கு எதிராக ஒருசாரார் குரல் எழுப்பிவருகின்றனர். மறுபுறம், இதனை ஒரு காமெடி காட்சியாகக் கண்டு ரசிக்காமல் எதற்காக எதிர்க்கவேண்டும் எனக் கூறுவோரும் உண்டு. எது எப்படி இருந்தாலும் நெல்சன்போல உலகம் முழுக்க டார்க் காமெடியை வைத்து தனக்கென அடையாளம் தேடிக்கொள்ளும் சினிமா இயக்குநர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை..!


வாசகர் கருத்து (2)

  • angbu ganesh - chennai,இந்தியா

    என்னது விஜய்க்கு இணையாகவா ரஜினிக்கு அப்புறம் தான் அவரெல்லாம் overseas மார்க்கெட் இது தெரியாம சின்ன பிள்ளைத்தனமா பேச கூடாது

  • Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா

    இதுதான் டார்க் காமெடியா? சாலையோர விபத்துகளை படம் எடுத்தல் மற்றும் செல்ஃபி கூட அதுதானே. இதற்கு மட்டுமே ஏன் டெரர் ஆகிறார்கள். தேவுடா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement