சென்னை; தமிழக சட்டசபையில், ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார்களா என்ற பிரச்னை இப்போது கடும் விவாதப்பொருளாக மாறி உள்ளது. அவரவர் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கேற்ப தங்கள் நிறத்தை மாற்றி பேட்டி அளித்து வருகின்றனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்த திமுக கட்சியினர் என ஆவேசமாக பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1989 ல் சட்டசபையில் நடந்த சம்பவம் குறித்து திருநாவுக்கரசர் அளித்த பேட்டி பல நாளிதழ்களில் வெளியானது. அந்த பேட்டியில் " எங்களை தாக்கி விட்டு நாங்கள் தாக்கியதாக கருணாநிதி கற்பனை செய்கிறார் என்று கூறியுள்ளார். துச்சாதனர்கள், துரியோதனர்கள் விரைவில் அழிவார்கள். கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும், விரைவில் திமுகவினர் அழிந்து போவார்கள் என்றும் பேட்டி அளித்துள்ளார்.
'ஜெ., சேலையை பிடித்து யாரும் இழுக்கவில்லை
சென்னை விமான நிலையத்தில், திருநாவுக்கரசர் நேற்று (ஆக-13) அளித்த பேட்டி:
தமிழக சட்டசபையில், 1989ல் நடந்த சம்பவம் குறித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை எல்லாம் பேசுகின்றனர்; அவர்கள் அப்போது, அரசியலில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சட்டசபையில் தற்போது இருப்பது போல, அப்போது, ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே இடைவெளி இருக்காது.
முதல்வர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன் இருக்கைக்கு எதிர் வரிசையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா அருகில் தான், நானும், காங்., தலைவர் மூப்பனாரும், குமரி அனந்தனும் அமர்ந்திருந்தோம்.
ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி, பட்ஜெட்டை சிறிய மேஜை மீது வைத்து வாசித்தார். அப்படி பட்ஜெட் வாசிக்கும் போது, பின்னால் இருந்த ஒரு எம்.எல்.ஏ., பட்ஜெட் புத்தகத்தை இழுத்தார். உடனே கருணாநிதி சத்தம் போட்டு திரும்பும் போது, அவரின் கண்ணாடி கழன்று கீழே விழுந்தது. அவர் தடுமாறினார். உடனே, மூத்த அமைச்சர்கள் முதல்வரை, அறைக்கு அழைத்து சென்று விட்டனர்.
இந்த நேரத்தில், பின் இருக்கைகளில் இருந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள், கருணாநிதியின் முகத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குத்தி விட்டதாக நினைத்து விட்டனர். இதனால், பட்ஜெட் புத்தகங்களை எங்களை நோக்கி வீசினர்.
ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக நானும், கே.கே.எஸ்.எஸ்.,ஆரும் நின்றோம். அப்போதும், சில புத்தகங்கள் ஜெயலலிதா தலையிலும், என் மீதும் விழுந்தன. புத்தகம் விழுந்ததால், ஜெயலலிதாவின் தலை கலைந்தது உண்மை. உடனே வீட்டிற்கு போகலாம் என்றதும், ஜெயலலிதா சரி என்றார்; வீட்டிற்கு சென்று விட்டோம். சண்டை, அசம்பாவிதம் நடந்தது எல்லாம் உண்மை தான். ஆனால் அடி, தடியோ, ரத்த காயங்களோ கிடையாது.கருணாநிதி முகத்தில் குத்தி விட்டதாக தி.மு.க.,வினரும், ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்ததாக அ.தி.மு.க.,வினரும் பிரசாரம் செய்தனர். ஆனால், இந்த இரண்டு சம்பவங்களும் உண்மை கிடையாது.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
1989ல் வெளியான திருநாவுக்கரசு பேட்டி:
1989ம் ஆண்டு மார்ச் 26ல் வெளியான பத்திரிகை செய்தியில் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு அளித்த பேட்டி இடம்பெற்றிருந்தது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
துரைமுருகன்
அப்போது ஜெயலலிதாவின் சேலையை இழுத்து தாக்கியதாக கூறிவிட்டு, தற்போது 'அந்தர் பல்டி' அடித்து ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்ததாக அதிமுக.,வினர் கூறுவது உண்மை கிடையாது என திருநாவுக்கரசு பேசியுள்ளார். திருநாவுக்கரசுவின் இந்த இரட்டை நிலைப்பாடை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (154)
எங்கேயிருந்தாலும் திருநாக்கூசா அரசு அவர்கள் வாங்கின காசுக்கு வக்கணையில்லாமெ கூவுவார். எப்பவும் ஒரே கொள்கைதான்.
அப்போ வேறவாயி.. இப்போ ... றவாயி.. இந்த ஆளின் வீழ்ச்சி வெகுதொலைவில் இல்லை.. அதிமுக பிரசாரத்தில் இதனை பயன்படுத்துவார்கள்.. பெண்களை கேவலப்படுத்தியவர்களை தேர்தலில் மக்கள் கவனித்துக்கொள்வார்கள்..
மஞ்ச கடிதாசு கொடுக்க இருந்த A1 க்கு வாழ்வு தந்து சகல அடைக்கலம் தந்து காப்பற்றியவரை தூக்கி இருந்ததனால் தான் இந்த பேட்டி என்பதை நினைவில் கொள்ளுங்கள்
திருநாவுக்கரசு உக்காரவைத்தபோது மட்டும் இனித்ததா??
மைக்கை அணைத்து விட்டு பேசினார்