Load Image
Advertisement

உலக இடது கைப்பழக்கம் கொண்டர்வர்கள் தினம்..! லெஃப்டீக்களின் சிறப்புகளை அறிவோம்

World Left Handers Day..! Know the specialties of lefties   உலக இடது கைப்பழக்கம் கொண்டர்வர்கள் தினம்..! லெஃப்டீக்களின் சிறப்புகளை அறிவோம்
ADVERTISEMENT
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் 788 கோடி மக்கள்தொகையில் வெறும் பத்து சதவீத குடிமக்களே, அதாவது 77 கோடிபேர் மட்டுமே இடதுகைப் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். மீதமுள்ள 90 சதவீதம்பேர் வலதுகைப் பழக்கம் கொண்டவர்களாவர். அதீத கற்பனைத் திறன் கொண்டவர்களான இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள், லெஃப்ட்டீக்கள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றனர்.

லெஃப்டீக்களுக்கு அதீத கற்பனைத் திறன் இருப்பதால் இவர்கள் கலை, இசை உள்ளிட்ட துறைகளில் ஆர்வத்துடன் இருப்பர். அமெரிக்க அதிபர்களில் பராக் ஒபாமா, பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஜெரால்ட் ஃபோர்டு ஆகியோர் இடது கைப்பழக்கம் கொண்டவர்கள் ஆவர். அதேபோல நடிகை ஏன்ஜலினா ஜோலி, டாம் க்ரூஸ், லேடி காகா, ஜஸ்டின் பைபர், பிராட் பிட், அமிதாப் பச்சன், மஹாத்மா காந்தி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இடது கைப்பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
Latest Tamil News
வலது கைப்பழக்கம் கொண்டவர்களுக்கு இடதுபுற மூளை அதிகமாக செயல்படும். லெஃப்டீக்களுக்கு வலது பக்க மூளை அதிகமாக செயல்படும். மிதமான ஒலியை வலது கைப்பழக்கம் கொண்டவர்களைக் காட்டிலும் லெஃப்டீக்களால் துல்லியமாகக் கேட்கமுடியும். லெஃப்டீக்களுக்கு உணர்ச்சி அதிகம் என்பதால் சற்று கோபக்காரர்களாக இருப்பர். லெஃப்டீக்களுக்கு அவர்களது வயோதிகத்தில் டிஸ்லக்ஸியா உள்ளிட்ட மனநோய்கள் தாக்க வாய்ப்பு அதிகம்.

லெஃப்டீக்கள் பொது இடங்களில் பயன்படுத்தும் பொருட்களைக் கையாள தங்களது அன்றாட வாழ்க்கையில் மிகுந்த சிரமத்துக்குள்ளாவர். உதாரணமாக கத்தரிக்கோல், வகுப்பறை மேஜை நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் வலது கைப்பழக்கம் கொண்டவர்களுக்கேற்பவே வடிவமைக்கப்பட்டு இருக்கும்.


லெஃப்டீ குழந்தைகள் கிரிக்கெட், ஹாக்கி, கோல்ஃப் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடும்போது, வயலின், கிதார், மேண்டலின் உள்ளிட்ட இசைக்கருவிகள் வாசிக்கப் பழகும்போது துவக்கத்தில் சிரமத்துக்குள்ளாவர். நம்மூரில் லெஃப்டீக்கள் சாப்பாட்டை வலது கையில் எடுத்துச் சாப்பிடப் பழகுவது சுலபம். Latest Tamil News

ஆனால் ஸ்பூன், ஃபோர்க், கரண்டி, சாப்ஸ்டிக்ஸ் ஆகியவற்றை வலது கையில் கையாளுவது சிரமம். இவர்கள் இந்த உபகரணங்களை இடது கையில் பயன்படுத்தும்போது சிலர் இதனை வித்யாசமாகக் பார்ப்பர். இதுபோன்ற சிறிய சவால்களை லெஃப்டீக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் சந்தித்து அவற்றுடன் வாழப் பழகுகின்றனர். அவர்களைக் கொண்டாடவே ஆகஸ்ட் 13 லெஃப்டீக்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement