Load Image
Advertisement

வானில் ஓர் தீபாவளி; பெர்சைட் விண்கல் மழை 2023

A Diwali in the sky; Perseid Meteor Shower 2023   வானில் ஓர் தீபாவளி; பெர்சைட் விண்கல் மழை 2023
ADVERTISEMENT
விண்ணில் பல அதிசயங்கள் நிறைந்துள்ளன. விண்மீன்கள், வால் நட்சத்திரங்கள், அண்டங்கள், கோள்கள், துணைக் கோள்கள் என பல வியத்தகு அதிசயங்கள் நிறைந்தது இந்தப் பிரபஞ்சம். இப்படிப்பட்ட பிரபஞ்சத்தின் அழகைக் கண்டு ரசிக்க இரவு வானமே சிறந்தது. இரவின் அழகைக் காண நம்மில் பலர் வீட்டின் மொட்டை மாடியில் நடை பயின்றிருப்போம்.

சில சமயங்களில் நாம் விண்ணில் அதிசயமான நிகழ்வைக் காண நேரிடலாம். அப்படிப்பட்ட நிகழ்வு நமது வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழுவதாகவும் இருக்கலாம். ஆனால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நடக்கும் பெர்சைட்ஸ் விண்கல் மழை நிகழ்வு (Perseids Meteor Shower) விண்வெளிப் பிரியர்களை வியப்புக்குள்ளாக்கும் ஓர் நிகழ்வு. மீட்டியர் எனப்படும் சிறு விண்கற்கள் நமது சூரியக் குடும்பத்தில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. வால் நட்சத்திரங்களின் உதிரி பாகங்களான இவை சூரியக் குடும்பத்தின் சில பகுதிகளில் அதிகமாகக் காணப்படும்.

பூமி சூரியனைச் சுற்றிவரும் வேளையில் இந்தப் பகுதியை பூமி கடக்கும்போது இந்த மீட்டியர்கள் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும். இவ்வாறு ஆயிரக்கணக்கான மீட்டியர்கள் ஈர்க்கப்படும்போது இவை பூமியின் பரப்பை நோக்கி வரும். பூமியின் வளிமண்டலத்தில் அதீத வேகத்தில் பயணிக்கும் மீட்டியர்கள் எரிந்து சாம்பலாகிவிடும்.
ஆண்டுதோறும் ஜூலை இறுதி துவங்கி ஆகஸ்ட், செப்., முதல் வாரம்வரை இந்த நிகழ்வு நடைபெறும்.
Latest Tamil News
ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் பூமி அதிக மீட்டியர்கள் கொண்ட பகுதியைக் கடக்கும். எனவே இந்த தினங்களில் அதிக மீட்டியர்கள் பூமி நோக்கி ஈர்க்கப்பட்டு சாம்பலாகும். இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருந்து இரவு வானத்தை இரவு 12 மணிக்குமேல் பார்ப்பவர்களுக்கு இந்த மீட்டியர் மழை தெரியும். இதனைக் காண தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களாலேயே காணமுடியும். இந்த மீட்டியர் மழை அமெரிக்கா, ஐரோப்பிய, ஆசிய நாடுகள் சிலவற்றில் பளிச்செனத் தெரியும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement