Load Image
Advertisement

தமிழரின் அடையாளமான இளவட்டக்கல்லின் வரலாறு..!

The history of Ilavattakkal, the symbol of Tamil..!   தமிழரின் அடையாளமான இளவட்டக்கல்லின் வரலாறு..!
ADVERTISEMENT
சமீபத்தில் காங்., எம்.பி., ராகுல் முன்னிலையில் தமிழக இளைஞர் ஒருவர் இளவட்டக்கல்லைத் தூக்கி பாராட்டு பெற்றார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இளவட்டக்கல்லின் வரலாறு, அதன் முக்கியத்துவம், பண்டைய தமிழரின் வாழ்வோடு இளவட்டக்கற்களுக்கு உண்டான தொடர்பு உள்ளிட்டவற்றை அறிவோம்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, தேனி, சிவகங்கை, நெல்லை ஆகிய பகுதிகளில் இளவட்டக்கல் எனப்படும் உருளைக் கல் பிரபலமானது. சுமார் நூறு கிலோ எடை கொண்ட இந்த கல்லை தூக்கிச்சுமக்கும் வீர விளையாட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் 19 ஆம் நூற்றாண்டில் நடைபெற்றது. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் ஆண்மகனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் தொன்றுதொட்டு பழக்கம் ஒன்று உண்டு. காலப்போக்கில் அந்தப் பழக்கம் கைவிடப்பட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் சுமக்கும் போட்டி தமிழரின் சிறப்புகளை உணர்த்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்குப் பரிசுகளும் அளிக்கப்படுகின்றன.

முழு உருளையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும் இளவட்டக்கல். இளவட்டக் கல்லுக்கு 'திருமணக் கல்' என்கிற பெயரும் உண்டு. இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல நிலைகள் உள்ளன. முதலில் குத்தவைத்து அமர்ந்த நிலையில் கல்லை இரு கைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின்மீது ஏற்றி, பின்னர் தோள்ப்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்கவேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்து கல்லோடு கோயிலை வலம்வருவது குளத்தை வலம்வருவது என சாதனைகளைத் தொடரலாம்.
Latest Tamil News
புது மாப்பிள்ளைகளுக்கு பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்ததாம். தமிழரின் உடல் பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்று பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாருமின்றி பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தைக் காணலாம். விரும்புகிறேன் படத்தில் இளவட்டக்கல் தூக்கும் பிரசாந்த்போல சில இளைஞர்கள் இவற்றை மண்ணில் இருந்து தோண்டி எடுத்து தூக்கவும் செய்கின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    முதல் மரியாதை படத்தில் சிவாஜி இல்லை தூக்க. இயலாமல் பூங்காற் ராதாவை று திரும்புமா.......... என பாடியே கணக்குபண்ணுவார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement