ADVERTISEMENT
துாத்துக்குடி: ''திராவிட மாடல் ஆட்சியில், நாங்குநேரி பள்ளியில் ஜாதி பெயரால் மோதியது மட்டுமின்றி, வீட்டுக்கு சென்று மாணவனையும், தங்கையையும் வெட்டி உள்ளனர். அதில் ஒரு மாணவரின் பெரியப்பா தி.மு.க., ஒன்றிய செயலர்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' பாத யாத்திரை நடத்தி வருகிறார். இதன், 14வது நாளான நேற்று துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.
எட்டயபுரம் சாலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முனியசாமி என்பவரது கடையில் காபி அருந்தினார். காபிக்கான காசை முனியசாமி வாங்க மறுத்தார்.
அண்ணாமலை முனியசாமியை கையோடு அழைத்துச் சென்று, அவரது கல்லாப்பெட்டியில், 500 ரூபாய் பணத்தை வைத்தார். 'இது காபிக்கான பணம் கிடையாது. இதை பத்திரமாக கல்லாப்பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். கடை நன்றாக வரும்' என்றார்.
அண்ணாமலை நடைபயணத்தில் பேசியதாவது:
விளாத்திகுளத்தில் சூரியன் கொஞ்சம் உக்கிரமாக உள்ளது. ஒரு காலத்தில் இங்கு மரங்கள் இருந்துள்ளன. தற்போது எந்த குளத்தையும் பார்க்க முடியவில்லை.
இங்குள்ள எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் மணல் அள்ளியதால், குளம் வறண்டுவிட்டது. வைப்பாற்றில் எப்போதும் தண்ணீர் நிற்காமல் வந்த காலம் உண்டு.தென்காசி மாவட்டம், செண்பகவல்லி அணையின் ஒரு பகுதி நீர் வைப்பாற்றுக்கும், மற்றொரு பகுதி நீர் கேரளாவுக்கும் சென்று கொண்டிருந்தது. வைப்பாற்றுக்கு வந்த நீரால் தென்காசி, விருதுநகர் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பட்டனர்.
இதை வைத்து விளாத்திகுளத்தில் பருத்தி, மிளகாய் விவசாயம் நடந்தது. செண்பகவல்லி அணை சேதம் அடைந்தபோது முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., ஆகியோர் சீரமைத்தனர்.
பின்னர் சேதமடைந்த நிலையில் செண்பகவல்லி அணையை சீரமைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து தி.மு.க., அதை நிறைவேற்றவில்லை. இதனால் மூன்று மாவட்ட விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் காற்றாலை நிறுவனத்திடம் கமிஷன் கேட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அவர் ஒரு குட்டி, செந்தில் பாலாஜி ம.தி.மு.க., - அ.தி.மு.க., போய் இப்போது தி.மு.க.,வில் உள்ளார்.ஜெ.. மரணத்திற்கு மோடி தான் காரணம் என்று எம்.எல்.ஏ., பேசியுள்ளார். இனி பேசினால் அவர் காலை எடுத்து வைக்க முடியாது.
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, 1600 ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்கள் உள்ளன. தனியாருக்கு நிலத்தை கொடுத்துவிட்டு திருச்செந்துார் கோயிலுடன் இணைக்க முயற்சி செய்கின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் மத்திய அரசு சார்பில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கப்பட உள்ளது. மேலும் அதனை சுற்றுலாத்தலமாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழக ஹிந்து அறநிலையத்துறை, கோவில்களின் சொத்துக்களை சூறையாடி வருகிறது. இது திராவிட மாடல் அரசு. விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை இல்லை.
திராவிட மாடல் ஆட்சியில், நாங்குநேரி பள்ளியில் ஜாதி பெயரால் மோதியது மட்டுமின்றி, வீட்டுக்கு சென்று மாணவனையும், தங்கையையும் வெட்டி உள்ளனர். அதில் ஒரு மாணவரின் பெரியப்பா தி.மு.க., ஒன்றிய செயலர்.
'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன பாரதியார் வாழ்ந்த மண்ணில், ஜாதியால் பட்டியல் இன மாணவரை வெட்டியுள்ளனர். வரும் பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
வாசகர் கருத்து (11)
அரசு துறைகள்/நிறுவனங்களில் உள்ள சாதி சார்ந்த தொழிலாளர் / அதிகாரிகள் சங்கத்திற்கு தடை விதிக்க வேண்டும்
அந்த பையனின் பெரியப்பா தி மு க ஒன்றிய செயலாளர், அது இருக்கட்டும், அந்த பையன் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது விடுவிக்கப்பட்டாரா. அந்த பையன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குறை சொல்வது நியாயம்.
நாங்குனேரியின் எதிர்கால தி மு க மாவட்டசெயலாளர் ஆவதற்கான ஆரம்பகட்ட தகுதியை அந்த மாணவர் பெற்றுவிட்டார்.
பாவம் இப்படி ஆகிவிட்டதே அண்ணாமலை வாயில் வந்த தெல்லாம் பேசக்கூடாது, கட்சி மாநில தலைவர் போல இனிமேலாவது கற்றுக் கொள்ளுங்கள். அதுவும் மத்தியில் ஆட்சியில் இருக்கிற கட்சி, பொறுப்பு வேண்டாமா? மற்றவர்கள் கேலி பேசுவது, மத்திய அரசுக்கும் சேர்த்துதான், புரிகிறதா? புரிந்தால் சரி. .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பிண அரசியல்