அப்படி எதுவும் நடக்கவில்லை அது ஜெயலலிதா நடத்திய நாடகம்!: ஸ்டாலின்

ஆங்கில நாளிதழுக்கு, அவர் அளித்துள்ள பேட்டி:
பார்லிமென்டில் பிரதமர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு பதில் சொல்லாமல், மேடைகளில் பேசுவதுபோல், காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.
பா.ஜ., ஆட்சியை ஒரு ஓட்டில் கவிழ்த்த கட்சி, அ.தி.மு.க., தான். அந்தக் கட்சிக்கு எதிராகத் தான் மோடி, லோக்சபா தேர்தலில் ஓட்டு கேட்டார். இப்போது, அ.தி.மு.க.,வை அருகில் வைத்திருப்பதை விட, சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா?
ஒத்திகை
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏதாவது 'வாட்ஸாப்' வரலாற்றை படித்து விட்டு பேசுவார். அவர் கூறியதுபோல், ஜெயலலிதாவுக்கு தமிழக சட்டசபையில், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை; அது, அவராக நடத்திக் கொண்ட நாடகம்.
'இப்படி சட்டசபையில் செய்ய வேண்டும் என முன்னதாகவே, தன் வீட்டில் ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார். அப்போது நான் உடனிருந்தேன்' என, தற்போதைய காங்., - எம்.பி., திருநாவுக்கரசு, முன்பு சட்டசபையில் பேசியுள்ளார்; அது சபைக் குறிப்பில் உள்ளது.
எனவே, தமிழக சட்டசபை நிகழ்வை பொய்யாக திரித்து, பார்லிமென்டில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது.
கவர்னர் ரவி, அதிகாரத்தை மீறி செயல்படுகிறார்; வேண்டாத வேலைகளை மட்டும் பார்க்கிறார். செந்தில் பாலாஜி மீதான விசாரணையை, அரசியல் விசாரணையாகத் தான் பார்க்கிறேன்.
அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகையே, அவருக்கும் தரப்பட்டு உள்ளது.
பா.ஜ., உறுதி
பா.ஜ.,வுக்கு எதிராக உள்ள கட்சிகள், ஒரே அணியாக ஆகிவிடக் கூடாது என்பதில், பா.ஜ., உறுதியாக இருக்கிறது.
அனைவரும் பிரிந்து நின்றால் தான் பா.ஜ.,வுக்கு லாபம். அதற்காக, சி.பி.ஐ., அமலாக்கத் துறை சோதனைகள் நடத்தப்படுகின்றன. அச்சுறுத்துவது தான், 'ரெய்டு'களின் நோக்கம்.
நரேந்திர மோடி என்ற பிம்பம் தகர்ந்து விட்டது. அவர் முகத்தை மட்டும் காட்டி வெற்றி பெற முடியாது. அதனால் தான், 39 கட்சிகளை கூட்டி வைத்து, அவர் 'போஸ்' கொடுத்தார். பொது சிவில் சட்டம், இந்தியாவின் பொது அமைதியையும், இணக்கத்தையும்சீர்குலைத்து விடும்.
தமிழகத்தில் பொருளாதார மந்தநிலை இல்லை. பிரதமருக்கு தமிழகம் குறித்தும், தமிழக பா.ஜ., குறித்தும் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (78)
அப்போது தெலுங்குப் பத்திரிக்கைகளில் இச்செய்தி முழுமையாக 😛வராததால் ஸ்டாலினுக்கு உண்மை தெரிய வாய்ப்பில்லை.
ஸ்டாலின் இப்படிஎல்லாம் பொய்களை அவிழ்த்து விட கூடாது நான் அப்போது நடந்தவற்றை பார்த்தவள். எல்லாவற்றையும் கடந்து அவர் முதல்வர் ஆனது உண்மை
ஆங்கில நாளிதழுக்கு ஸ்டாலின் பேட்டி ???? இது என்ன ஆங்கிலத்துக்கு வந்த சோதனை ????
இன்று 50 வயது இருப்பவர்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும்
பொய்யை தவிர வேறு எதும் இவர் வாயில் வராதா?